Published:Updated:

`செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே..!’ - ஊரடங்கில் சென்னை மெக்கானிக்குக்கு நேர்ந்த சோகம்

கொலை
கொலை

ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்த மெக்கானிக் வசந்த், செல்போனில் பேசியபடி தெருவில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.

சென்னை மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்த் (18). இவர் மெக்கானிக்காக வேலை பார்த்துவந்தார். ஊரடங்கு காரணமாக வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். வீட்டிலிருந்த வசந்துக்கு செல்போனில் அழைப்பு வந்தது. வீட்டுக்குள் சிக்னல் சரியாகக் கிடைக்கவில்லை என்பதால் அவர் பேசியபடி தெருவுக்கு வந்திருக்கிறார்.

`மனைவி கொடுமையிலிருந்து தப்பிக்க ஹெல்ப் லைன் நம்பர்' -ஊரடங்கில் முதல்வருக்குச் சென்ற புகார் மனு
மயிலாப்பூர் ரயில் நிலையம்
மயிலாப்பூர் ரயில் நிலையம்

தெருவில் நின்றபடி வசந்த், செல்போன் பேசிக் கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 4 பேர் வசந்தை சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள். திடீரென நடந்த தாக்குதலில் வசந்த் கீழே விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். பொதுமக்களைப் பார்த்ததும் பைக்கில் வந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிகிறது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய வசந்தை மீட்ட பொது மக்கள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே வசந்த் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வசந்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா
ஊரடங்கில் ஏன் இப்படி வெளியில் விளையாடுகிறீர்கள்? - தட்டிக் கேட்ட தம்பிக்காக உயிரை விட்ட அண்ணன்

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். வசந்த் கொலை குறித்து நடத்திய விசாரணையில் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரத் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. அதனால் சரத்திடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஊரடங்கு சமயத்தில் மெக்கானிக் வசந்த் கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு