Published:Updated:

`செல்லப்பிராணிகள் கடைக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!’ - போக்ஸோவில் கைதான சென்னை இளைஞர்

Representational Image
Representational Image

சென்னை மயிலாப்பூரில் 16 வயதுச் சிறுமியின் கைகளைக்கட்டி பாலியல் வன்கொடுமை செய்த செல்லப்பிராணிகள் கடை நடத்தி வரும் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ரேவதி (பெயர் மாற்றம்) என்ற பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் கூறியிருப்பதாவது ``என்னுடைய 16-வயது மகள், காமராஜர் சாலையில் உள்ள செல்லப்பிராணிகள் கடைக்கு 13.5.2020-ல் சென்றார். அப்போது கடையில் இருந்த இளைஞர் எனது மகளிடம் தவறாக நடந்துள்ளார். பின்னர் 30.5.2020-ல் மீண்டும் அதே இளைஞர் என்னுடைய மகளிடம் தவறாக நடந்துள்ளார். அதனால் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

`வேலைக்குச் சென்ற இடத்தில் பாலியல் வன்கொடுமை!’ -ராணிப்பேட்டை சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

புகாரின் பேரில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சம்பந்தப்பட்ட இளைஞரிடமும் பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் போலீஸார் விசாரித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்தபோது அவர் கூறிய தகவலைக் கேட்டு மயிலாப்பூர் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செல்லப்பிராணிகள் கடை நடத்திவரும் இளைஞர் மணிகண்டனை (30) போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``பாதிக்கப்பட்ட சிறுமி, 13.5.2020-ல் செல்லப்பிராணிகள் கடைக்குச் சென்றபோது உள்ளே அவரை அழைத்துச் சென்றுள்ளார் மணிகண்டன். அப்போது செல்லப்பிராணிகளை சிறுமி ஆர்வமாகவும் ஆசையாகவும் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் சிறுமியின் கைகளைக் கயிற்றால் கட்டியுள்ளார். அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிறுமியை வலுக்கட்டாயமாக கைகளைக் கட்டிய பிறகுதான் மணிகண்டன் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அவர் சத்தம் போடாமலிருக்க வாயையும் பொத்தியுள்ளார். அதனால் சிறுமியின் அலறல் சத்தம் வெளியில் கேட்கவில்லை. பின்னர், வெளியில் சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். அதனால் பயந்து போன சிறுமி வெளியில் சொல்லவில்லை.

மணிகண்டன்
மணிகண்டன்

இதையடுத்து 30.5.2020 அன்று மணிகண்டன் சிறுமியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத போது சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். பின்னர் மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அழுது கொண்டிருந்த சிறுமி, வீட்டுக்கு வந்த அம்மாவிடம் நடந்த விவரத்தைக் கூறிக் கதறி அழுதுள்ளார். சிறுமியின் அம்மா அளித்த புகாரின்பேரில் மணிகண்டனைக் கைது செய்து போக்ஸோ மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. மணிகண்டன், திருவல்லிக்கேணியில் குடியிருந்துவருகிறார்."என்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு