Published:Updated:

சென்னை: `குடும்ப வாழ்க்கை; உடல் ஆரோக்கியமின்மை' - திருமணமான 2 மாதத்தில் பட்டதாரிப் பெண் தற்கொலை

தற்கொலை
தற்கொலை

ஆடிமாதத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்த பட்டதாரி இளம்பெண், தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இந்தச் சோகம் திருமணமான 66-வது நாளில் நடந்திருக்கிறது.

சென்னை ஆதம்பாக்கம், மகாலட்சுமி நகர், 13-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்தானம் (65). இவர், ரயில்வேயில் சீனியர் கிளர்க்காகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி லட்சுமி. இந்தத் தம்பதியருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். இளைய மகள் அக்சயா (29). பி.காம் படித்துள்ளார். அக்சயாவுக்கும் புதுப்பெருங்களத்தூரைச் சேர்ந்த குருபிரசாத்துக்கும் 3.6.2020-ல் திருமணம் நடந்தது. குருபிரசாத், தனியார் கம்பெனியில் பணியாற்றிவருகிறார்.

திருமணம்
திருமணம்

திருமணத்துக்குப்பிறகு சீனிவாச நகரிலுள்ள காயத்ரி தெருவில் அக்சயா குடியிருந்தார். ஆடி மாதம் என்பதால், அக்சயாவை, வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் சந்தானம். ஆடி மாதம் முடிவடையவிருக்கும் நிலையில், 9-ம் தேதி இரவு அக்சயா படுக்கையறைக்குச் சென்றார். 10-ம் தேதி காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த சந்தானம், லட்சுமி இருவரும் கதவைத் தட்டியிருக்கிறார்கள். பதில் வரவில்லை. இதனால் தன்னுடைய மகன் மோகனுக்கு சந்தானம் போனில் தகவல் தெரிவித்தார்.

பின்னர் கதவை உடைத்து உள்ளே செனறு பார்த்தபோது அக்சயா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீஸார், அக்சயாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அக்சயாவின் தற்கொலை குறித்து இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 174 (3) -ன் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமணமாகி 66 நாள்களே ஆகியிருப்பதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ அளிக்கும் ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

எப்ஐஆர்
எப்ஐஆர்
சென்னை அதிர்ச்சி: `யாருக்கு தில் அதிகம்?' - 23-வது மாடிச் சுவரில் சாகசம் செய்த சிறுமி!

சந்தானம் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், `எனது மகள் அக்சயாவுக்கும் குருபிரசாத்துக்கும் 27.3.2020-ல் திருமணம் நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால், கோவிட்-19 காரணமாக திருமணம் 3.6.2020-ல் நடந்தது. கணவர் வீட்டில் சந்தோஷமாகவே வாழ்வதாக எங்களிடம் அக்சயா கூறியிருந்தாள். மேலும், மருமகன் அவளை நன்றாகவே கவனித்து வருவதாக அக்சயா கூறினாள். ஜூலை 13-ம் தேதி ஆடி மாதத்துக்காக அவளை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தோம். எனது மகளுக்கு மருமகன், அவருடைய வீட்டில் உள்ளவர்களால் எந்தவிதத் தொந்தரவும் கிடையாது. வரதட்சணை சம்பந்தமாக எந்தப் பிரச்னையும் இல்லை. என் மகள் மிகவும் ஒல்லியாகவும், உடல்நலம் குன்றியும் இருப்பாள். குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான உடல் ஆரோக்கியமின்மையே அவள் தற்கொலைக்குக் காரணம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமணமாகி இரண்டு மாதங்களே கடந்திருக்கும் நிலையில் பட்டதாரிப் பெண் தற்கொலை செய்துகொணடிருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு