Published:Updated:

`சோதனை மேல் சோதனை; தாய்மாமனுடன் திருமணம்!' - விபரீத முடிவை எடுத்த சென்னை நர்ஸ்

Representational Image
Representational Image

துரைசாமியின் குடும்பத்தில் மனைவி, மூத்த மகள், மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. இதில் மகன் தற்கொலை செய்துகொண்டார்.

செங்கல்பட்டு மதுராந்தகம் தொழுப்பேடு எடையாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (65). இவரின் மகள் திவ்யா (27). இவர், டிப்ளோமா நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். திவ்யாவுக்கும் அவரின் தாய்மாமனான முகப்பேரில் குடியிருக்கும் ரவிக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முதலிரவில் கொல்லப்பட்ட மணமகள்! - திருவள்ளூர் மணமகனின் அதிர்ச்சிப் பின்னணி
Representational Image
Representational Image

10-ம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய நர்ஸ் திவ்யா, புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் நொளம்பூர் போலீஸார் திவ்யாவின் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திவ்யா தற்கொலைக்கு என்ன காரணம் என நொளம்பூர் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நொளம்பூர் போலீஸார் கூறுகையில், ``துரைசாமியின் மனைவி மல்லிகா. இந்தத் தம்பதியருக்கு ஒரு மகனும் நித்யா, திவ்யா என 2 மகள்களும் உள்ளனர். துரைசாமியின் மகன் சில ஆண்டுகளுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து துரைசாமியின் மனைவி மல்லிகாவுக்கும் மனநலம் பாதிக்கப்பட்டது. அவரை துரைசாமி வீட்டில் வைத்து கவனித்துவருகிறார். மனைவியைத் தொடர்ந்து மூத்த மகள் நித்யாவுக்கும் (34) மனநலம் பாதிக்கப்பட்டது.

`சசிகலா எப்போது விடுதலை ஆவார்?' - ஆர்.டி.ஐ கேள்விக்கு அதிர்ச்சிப் பதில் அளித்த சிறைத்துறை
Representational image
Representational image

ஒரே குடும்பத்தில் மகன், தற்கொலை செய்து கொண்ட நிலையில் மனைவி, மூத்த மகள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் துரைசாமி விரக்தியடைந்தார். அவரின் ஒரே ஆதரவாகவும் நம்பிக்கையாகவும் இளைய மகள் திவ்யா இருந்துவந்தார். அவர், கடந்த 7 ஆண்டுகளாக சென்னை குமரன்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றிவந்தார். திவ்யாவின் வருமானத்தை நம்பிதான் துரைசாமியின் குடும்பம் இருந்து வந்தது.

கடந்த ஜனவரி மாதம் திவ்யாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால் சொந்த ஊருக்கு திவ்யா சென்றார். 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னைக்கு திவ்யா வந்தார். சென்னை முகப்பேர், காலமேகச் சாலையில் குடியிருந்து வரும் துரைசாமியின் மனைவி மல்லிகாவின் தம்பி ரவியின் வீட்டில் திவ்யா தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார். திவ்யாவுக்கும் அவரின் தாய்மாமனான ரவிக்கும் திருமணம் செய்து வைக்க துரைசாமி ஏற்பாடு செய்துள்ளார்.

`என்னைவிட அவளுக்கு ஒரு வயது அதிகம்!' -சினிமா துணை நடிகை விவகாரத்தில் சிக்கிய நடிகர்
திருமணம்
திருமணம்

ரவியின் மனைவி இறந்து விட்டதால் அவருக்கு திவ்யாவை 2-வதாக திருமணம் செய்து கொடுக்க துரைசாமி சம்மதித்தார். இவர்களின் திருமணம் இன்று (12.6.2020) எளிமையாக வீட்டிலேயே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சில தினங்களாக திவ்யா, தனக்கு தானே தனிமையில் பேசி வந்துள்ளார். மேலும் மனஉளைச்சலுடனும் காணப்பட்டுள்ளார். சரியாகவும் சாப்பிடாமல் இருந்துவந்துள்ளார். இந்தநிலையில் மின்விசிறியில் திவ்யா தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்துவருகிறோம்"என்றனர்.

துரைசாமி நொளம்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், ``சென்னை முகப்பேரில் குடியிருக்கும் மைத்துனர் ரவிக்கும் திவ்யாவுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் அதற்குள் திவ்யா தற்கொலை செய்துகொண்டுள்ளார். திவ்யாவின் மரணத்துக்கு வேறு எந்தக்காரணமும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் நொளம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு திவ்யாவின் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எப்ஐஆர்
எப்ஐஆர்

துரைசாமியிடம் போலீஸார் விசாரித்தபோது `என்னுடைய மகள் திவ்யா, ரவியைத் திருமணம் செய்து கொண்டு நல்லப்படியாக வாழ்வாள் என்று ஆசைப்பட்டேன். ஆனால் சோதனைக்கு மேல் சோதனையாக திவ்யாவும் தற்கொலை செய்துவிட்டாள்' என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் சென்னை தனியார் மருத்துவமனை நர்ஸ், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு