Published:Updated:

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 16 ஆண்டுகள் சிறை! - சென்னை நீதிமன்றம் அதிரடி

சிறைத் தண்டனை
சிறைத் தண்டனை ( Representational Image )

சென்னையில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதானவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 30.5.2016-ல் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி உத்தரவின்பேரில் அடையாறு அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (45) என்பவரைக் கைதுசெய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
Representational Image
ஹைதராபாத்: பாலியல் வன்கொடுமை; பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை! - 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அடையாறு போலீஸார் தரப்பில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தட்சிணாமூர்த்திக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 8,500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட அடையாறு அனைத்து மகளிர் போலீஸாரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார்.

அடுத்த கட்டுரைக்கு