Published:Updated:

தந்தையைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலைசெய்து புதைத்த மகன்! - சென்னையில் பயங்கரம்

கொலை

சென்னையில் தந்தையைக் வெட்டிக் கொலைசெய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் மகனை போலீஸார் தேடிவருகின்றனர்.

தந்தையைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலைசெய்து புதைத்த மகன்! - சென்னையில் பயங்கரம்

சென்னையில் தந்தையைக் வெட்டிக் கொலைசெய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் மகனை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
கொலை

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் வசித்துவருபவர் குமரேசன் (78). ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான இவரின் மனைவி இறந்துவிட்டார். குமரேசனுக்கு, குணசேகரன் என்ற ஒரு மகனும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். குமரேசனின் மூத்த மகள் காஞ்சனாவின் கணவர் இறந்துவிட்டார். இதனால் அவர், தன் தந்தையுடன் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டின் இரண்டாவது தளத்தில் வசித்துவந்திருக்கிறார். அந்த வீட்டின் முதல் தளத்தில் குணசேகரன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்துவந்திருக்கிறார்.

கொலை
கொலை

கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சனா மந்தைவெளியில் உள்ள வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது வளசரவாக்கம் வீட்டில் அவரின் தந்தை மட்டும் தனியாக இருந்திருக்கிறார். காஞ்சனா மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு வெளிப்பக்கமாக மூடப்பட்டிருந்தது. உடனே, கீழ்த்தளத்தில் வசிக்கும் தன் தம்பி குணசேகரனுடன் சேர்ந்து தந்தையை அருகில் உள்ள பல்வேறு இடங்களில் தேடியிருக்கிறார். தேடிக்கொண்டிருக்கும்போதே, உடனிருந்த குணசேகரன் திடீரென மாயமாகிவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காஞ்சனா குணசேகரனின் செல்போனுக்கு அழைத்தபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால், சந்தேகமடைந்த காஞ்சனா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பூட்டியிருந்த வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்திருக்கிறார். அப்போது படுக்கை அறை முழுவதும் ரத்தமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், இந்தச் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

கொலை
கொலை

முதற்கட்ட விசாரணையில், குணசேகரன் அவர் தந்தை குமரேசனை வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும், தலைமறைவான குணசேகரனின் மனைவியிடம் நடத்திய விசாரணையில், காவல்துறையினருக்கு சில முக்கியத் தகவல்கள் கிடைத்தன. குணசேகரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் நண்பர் ஒருவரைச் சந்திக்க காவேரிப்பாக்கம் அருகில் உள்ள சோளிங்கருக்குச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விசாரணையில், சோளிங்கர் பகுதியில் குணசேகரன் புதிதாகக் கடை கட்டுவதற்காக இடம் வாங்கியிருப்பது தெரியவந்தது. மேலும், நேற்று காலை அந்த இடத்துக்கு குணசேகரன் ஒரு வேனில், மூடி போட்டிருந்த டிரம் மற்றும் மண்வெட்டியுடன் சென்றிருக்கிறார். பின்னர், உடனிருந்த நண்பரை அங்கிருந்து அனுப்பிவிட்டு, துண்டு துண்டாக வெட்டப்பட்ட தந்தையின் உடலை அந்த இடத்தில் புதைத்தது தெரியவந்தது. அதையடுத்து, காவல்துறையினர் புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

வளசரவாக்கம் காவல் நிலையம்
வளசரவாக்கம் காவல் நிலையம்

தந்தையைக் கொலை செய்துவிட்டு, தலைமறைவாக இருக்கும் குணசேகரனைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்திருக்கின்றனர். இந்தக் கொலைக்குத் தந்தை, மகனுக்கு இடையில் ஏற்பட்ட சொத்து பிரச்னை காரணமா அல்லது வேறு காரணங்கள் ஏதும் இருக்கின்றனவா எனப் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism