Published:Updated:

சென்னை: கொள்ளை புகாரால் வெளிவந்த மனைவியின் சீக்ரெட்! - அதிர்ச்சியில் கணவர்

கொள்ளை வழக்கில் கைதான ரகு
கொள்ளை வழக்கில் கைதான ரகு

சென்னை செங்குன்றம் பகுதியில் கொள்ளை புகார் கொடுத்த கணவருக்கு மனைவியின் இன்னொரு முகம் தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை, செங்குன்றம், பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (பெயர் மாற்றம்). லாரி டிரைவர். ராஜேஷின் 2-வது மனைவி ராதா (பெயர் மாற்றம்), ஒரு மகன், மகள், ராதாவின் தங்கை ஆகியோர் கூட்டுக்குடும்பமாக இந்த வீட்டில் குடியிருந்துவருகின்றனர். கடந்த 5-ம் தேதி அனைவரும் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, ராஜேஷின் வீட்டுக்கு பைக்கில் ஒரு கும்பல் வந்தது. அப்போது வீட்டின் கேட் பூட்டப்பட்டிருந்தது. உடனே அந்தக் கும்பல், கதவை வேகமாகத் தட்டியுள்ளனர். சத்தம் கேட்டு வெளியில் வந்த ராஜேஷ், கும்பலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

ஆகாஷ்
ஆகாஷ்

உடனே வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகளை படுக்கையறைக்குள் செல்லும்படி ராஜேஷ் கூறினார். பின்னர் வீட்டின் கதவை பூட்ட ராஜேஷ் முயற்சி செய்தார். அதற்குள் அந்தக் கும்பல் வீட்டுக்குள் நுழைந்தது. ஹாலில் ராஜேசும் அவரின் மகனும் மட்டும் இருந்தனர். அவர்களின் கழுத்தில் கத்தியை வைத்த கும்பல், நகை, பணம் எங்கு இருக்கிறது என்று கேட்டனர். உடனே பீரோவில் இருப்பதாக ராஜேஷ் கூறினார். கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் பூஜை அறையிலிருந்த பீரோவை திறந்து அதிலிருந்த தங்க நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தான். பின்னர் அந்த வீட்டிலிருந்து 3 செல்போன்களையும் எடுத்தான். அதன்பிறகு இந்தச் சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டிவிட்டு தப்பிச் சென்றது அந்தக் கும்பல்.

கொள்ளைக் கும்பல் சென்ற பிறகு படுக்கையறைக்குள் இருந்து அனைவரும் வெளியில் வந்தனர். பட்டப்பகலில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்து ராஜேஷ், செங்குன்றம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ராஜேஷ் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற செல்போன் சிக்னல்களையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.

வினோத்
வினோத்

அப்போது செல்போன் சிக்னல் மீஞ்சூர் பகுதியைக் காட்டியது. சிசிடிவியில் பதிவான கொள்ளையர்களின் பைக் நம்பர்கள் மற்றும் அவர்கள் தண்டையார்பேட்டை வரை பைக்கில் சென்றதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரகு (32) என்பவரின் தலைமையில் இந்தக் கொள்ளை கும்பல் வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ரகுவிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருமழிசை: `வண்டிக்கு 50 ரூபாய்; டோக்கன் கொள்ளை?!’ - போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,``இந்தக் கொள்ளை சம்பவத்தில் வியாசர்பாடியைச் சேர்ந்த ரகு, செல்வம், திருவொற்றியூரைச் சேர்ந்த ஆகாஷ் (19), திருவள்ளூர் மாவட்டம், பள்ளம், புதுநகரைச் சேர்ந்த யுவராஜ் (22), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் என்கிற வெள்ளை கார்த்திக் (26), குப்புசாமி (25), ஜான் என்கிற ஜான்சன் (25), தோத்து என்கிற வினோத் (25), பிரசாத் (25), அத்திப்பட்டு, புதுநகரைச் சேர்ந்த மணி என்கிற டியோ மணி (22) ஆகியோரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரித்தபோது, எம்.கே.பி நகரைச் சேர்ந்த ஒருவர் மூலம் ரகுவுக்கு ராஜேஷின் மனைவி ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராதா அந்தப் பகுதியில் வறுமையில் வாடும் பெண்களை ரகசியமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இதற்காக ராதாவின் வீட்டின் மொட்டை மாடியில் ஒரு அறை உள்ளது.

பிரசாந்த்
பிரசாந்த்
சென்னை: `படிப்பு பிசிஏ; பகுதி நேர வேலை' - கஞ்சா வழக்கில் சிக்கிய உணவு டெலிவரி உமன்

கடந்த வாரம் ராஜேஷின் வீட்டுக்கு வந்த ரகு, அங்கிருந்த ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். ராஜேஷின் மனைவி அவரின் கணவருக்கு தெரியாமல் இந்தத் தொழிலை செய்து வந்துள்ளார். அதனால், ராஜேஷின் வீட்டில் கொள்ளையடிக்க தன்னுடைய கூட்டாளிகளுடன் ரகு திட்டமிட்டுள்ளார். அதன்படி கொள்ளைச் சம்பவத்தில் கூட்டாளிகளுடன் ஈடுபட்டுள்ளார். இந்தக் கொள்ளையில் ஏழரை சவரன் எடையுள்ள தங்க நகைகள், குழந்தையின் வெள்ளிக் கொடி, 50 கிராம் எடையுள்ள வெள்ளி கொலுசு, 9,000 ரூபாய் மதிப்புள்ள 3 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். அவற்றையும் கொள்ளையடிக்கப் பயன்படுத்தி பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளோம். கைதானவர்கள் மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடிகளான இந்தக் கும்பல் ஊரடங்கு நேரத்தில் பணமில்லாததால் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இந்த வழக்கில் இன்னும் சிலரை தேடிவருகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு