Published:Updated:

சென்னை: தாயுடன் தூக்கம்; கதவை உடைத்த ரெளடி! - மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( REPRESENTATIONAL IMAGE )

தென் சென்னையைச் சேர்ந்த 22 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலீஸார் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கைது செய்தனர்

தென் சென்னையைச் சேர்ந்த 22 வயது மாற்றுத்திறனாளிப் பெண் தரப்பில், கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் 376(2) (1) (k) -பாலியல் வன்கொடுமை, 307- (கொலை முயற்சி), 450 -(அத்துமீறி நுழைதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். பெண்ணிடம் தவறாக நடந்தவர்களைத் தேடிவந்தனர். ஆனால், `அவர்கள்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கூறி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

ராஜ்குமார்
ராஜ்குமார்

இந்தப் பிரச்னையை மாநில மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து கையிலெடுத்தது. `மூன்று வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என சென்னை போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்படி கீழ்ப்பாக்கம் போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த டிபி சத்திரத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ஆனந்த் ஆகியோரை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். இருவரிடமும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக போலீஸார் விசாரித்தனர். அதை வாக்குமூலமாகப் பதிவு செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரௌடி லிங்கத்தை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஆனந்த்
ஆனந்த்
சென்னை: மூதாட்டிக்கு அதிகாலையில் பாலியல் வன்கொடுமை! மர்ம நபரைத் தேடும் போலீஸ்

இது குறித்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``சென்னையில் 22 வயதான மனநலம் குன்றிய பெண் தனது தாயுடன் வசித்துவருகிறார். அதிகாலையில் அந்தப் பெண் வீட்டில் அசந்து துாங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது வீட்டின் கதவை உடைத்து மூன்று மர்ம நபர்கள் உள்ளே நுழைந்திருக்கின்றனர். அவர்கள் அந்தப் பெண்ணையும், அவரின் தாயையும் சரமாரியாகத் தாக்கினர். தாயின் கண்முன்னாலேயே கத்திமுனையில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை மூவரும் கூட்டாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் கூச்சலிடவே அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அவர்களில் இருவரைக் கைது செய்திருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு