Published:Updated:

சென்னை: வாட்ஸ்அப் குரூப்; பகிரப்பட்ட ஆபாச வீடியோக்கள்! - போலீஸில் சிக்கிய நண்பர்கள்

ஆபாச வீடியோ வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள்
ஆபாச வீடியோ வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள்

சென்னை மயிலாப்பூரிலுள்ள பூங்காவில் நீண்டநேரமாக செல்போனைப் பார்த்துக்கொண்டிருந்த நண்பர்களை போலீஸார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் பெண்கள், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.

சென்னை மயிலாப்பூரிலுள்ள பூங்கா அருகே மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸார், கடந்த 4-ம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பூங்கா அருகில் இரண்டு இளைஞர்கள் செல்போனை நீண்டநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீஸார், இளைஞர்களின் அருகில் சென்றனர். போலீஸைப் பார்த்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.

ஆபாசப் படம்
ஆபாசப் படம்
representational image

அதனால், இளைஞர்களின் செல்போனை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வுசெய்தனர். அப்போது அதில் சிறுமிகள், பெண்களின் ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் இருந்தன. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், இரண்டு இளைஞர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

`கழிவறையில் ஸ்பை கேமரா; ஹார்டுடிஸ்க்கில் ஆபாச வீடியோ!' - ஐ.டி.ரெய்டில் சிக்கிய சென்னை கணக்காளர்

இது குறித்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``பொது இடத்தில் வைத்து செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருந்தது சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த மகேந்திரன் (35), சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் (32) எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரும் நண்பர்கள். இளைஞர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் ஒரு வாட்ஸ்அப் குரூப் செயல்பட்டுக்கொண்டிருந்தது.

ஆபாச வீடியோ
ஆபாச வீடியோ
representational image

அதில் பெண்கள், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் குரூப்பில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன. அந்த குரூப்பின் அட்மின்களாக மகேந்திரன், கிருஷ்ணன் மற்றும் திண்டுக்கல், கொல்லாம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் இருந்தனர். இதையடுத்து மூன்று பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். இந்தக் கும்பல், இணையதளங்களிலிருந்து பெண்கள், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், போட்டோக்களை டௌன்லோடு செய்து அதை வாட்ஸ்அப் குரூப்களில் பகிர்ந்துவந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து குரூப்பில் இருப்பவர்களின் விவரங்களைச் சேகரித்துவருகிறோம். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு