Published:Updated:

சென்னை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை மிரட்டி பணம் பறித்த கும்பல்! - சிக்கியது எப்படி?

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

சென்னையில் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர்களை குறி வைத்து டெல்லி சைபர் க்ரைம் போலீஸ் என மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீஸார் மடக்கிப் பிடித்திருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா ஊரடங்கில் பலர் செல்போனே கதி என மாறியிருந்தனர். அதனால் செல்போனில் வீடியோக்களை பார்ப்பது இருமடங்காக அதிகரித்தது. இந்தநிலையில் தமிழகத்தில் அதிகம் பேர் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதாக ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவுக்கு ஏற்கெனவே வந்திருந்தது. அதன்அடிப்படையில் சிறார் வதை வீடியோக்களை பார்த்த சிலரை தமிழக போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனால் ஆபாச வீடியோக்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஐ.பி முகவரி, இன்டர்நெட் நெட்வொர்க், செல்போன் நம்பர் ஆகியவற்றை கொண்டு சிறார் வதை வீடியோக்களைப் பார்த்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

ஆபாச வீடியோ
ஆபாச வீடியோ
representational image

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவிலிருந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு ஆபாச வீடியோக்களைப் பார்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே ஆபாச வீடியோக்களைப் பார்த்தவர்களின் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு சென்னையைச் சேர்ந்த ஒருகும்பல் பணம் பறித்ததாக டெல்லி சைபர் க்ரைம் போலீஸாருக்கு புகார் வந்தது. அதன்அடிப்படையில் போலீஸார் விசாரித்தபோது பணம் பறித்தவர்களின் செல்போன் சிக்னல் சென்னை திருவல்லிக்கேணி பகுதியைக் காட்டியது. உடனடியாக டெல்லி சைபர் க்ரைம் போலீஸார், சென்னை போலீஸாரிடம் விவரத்தைக் கூறி விசாரணை நடத்தும்படி தெரிவித்தனர்.

டெல்லி: `10 வயது மகனுடன் ஆபாச நடனம்; அதிர வைத்த வீடியோ!' - அதிரடியில் இறங்கிய மகளிர் ஆணையம்

இதையடுத்து திருவல்லிக்கேணி போலீஸார், டெல்லி சைபர் கிரைம் போலீஸார் கொடுத்த தகவலின்படி சென்னை மாங்காட்டை சேர்ந்த ராம்குமார், கொளத்தூரை சேர்ந்த கேப்ரியேல் ஜோசப் திருச்சியைச் சேர்ந்த தினோசந்த் ஆகிய மூன்று பேரையும் பிடித்தனர். அவர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள் செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர்களின் ஐபி முகவரியை எடுத்திருக்கின்றனர். பின்னர், அதில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் போன் செய்து, நாங்க டெல்லி சைபர் க்ரைம் போலீஸ், உன்னோட செல்போன், லேப்டாப்பிலிருந்து சிறார் வதை வீடியோக்களை பார்த்திருக்க, இது வெளியில் தெரிந்தால் அவமானம்.

ஆபாச மிரட்டல்கள்
ஆபாச மிரட்டல்கள்

ஃப்ர்ஸ்ட் டைம் என்கிறதால 5,000 ரூபா ஃபைன், மீண்டும் பார்த்தா, அரஸ்ட் பண்ணிடுவோம் என மூன்று பேரும் மிரட்டியிருக்கின்றனர். அதற்கு பயந்து டெல்லி போலீஸார் எனக்கூறியவர்களின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்திருக்கின்றனர். 5,000 ரூபாயில் தொடங்கி அதைவிட அதிகமாக என இந்தக் கும்பல் பணத்தைப் பறித்திருக்கிறது. இந்தச் சமயத்தில்தான் பணத்தை அனுப்பிய சிலர், உண்மையிலேயே இவர்கள் டெல்லி சைபர் க்ரைம் போலீஸா என விசாரித்தபோதுதான் உண்மை தெரியவந்திருக்கிறது. உடனடியாக டெல்லி சைபர் க்ரைம் போலீஸாரிடம் அவர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். அதன்அடிப்படையில்தான் மூன்று பேரும் பிடிப்பட்டிருக்கிறார்கள். மூன்று பேரையும் டெல்லி போலீஸாரிடம் ஒப்படைக்க உள்ளோம்" என்றனர்.

"அவை ஆபாச வீடியோக்கள் அல்ல!"- கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஆதரவாக ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு