Published:Updated:

`ஒரு நாளைக்கு 4 டன்; டார்க்கெட் வைத்து திருட்டு!’ - சென்னையில் சிக்கிய காயிலாங் கடை வியாபாரிகள்

 பழைய இரும்புகள் திருட்டு
பழைய இரும்புகள் திருட்டு

தினமும் டார்க்கெட் நிர்ணயித்து, சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மூடியே கிடக்கும் தொழிற்சாலைகளிலிருந்து பழைய இரும்புப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில், நீதிமன்ற வழக்குகளில் சிக்கிய சில தொழிற்சாலைகள் இயங்காமல் உள்ளன. செயல்படாத தொழிற்சாலைகளில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தன.

 `தவறு நடக்கிறது; பணம் சம்பாதிக்கிறீர்கள்!' -போலீஸுக்கு சவால்விட்ட சமூக சேவகருக்கு நேர்ந்த சோகம்
மினிலாரியில் ஏற்றப்பட்ட பொருள்கள்
மினிலாரியில் ஏற்றப்பட்ட பொருள்கள்
தொழிற்பேட்டையில் உள்ள சில தொழிற்சாலைகள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் அந்த தொழிற்சாலைகள் இயங்காமல் மூடியே கிடக்கின்றன. அதனால் சில கும்பல், காவலாளிகளுடன் கூட்டு சேர்ந்து, அங்குள்ள பொருள்களைத் திருடிவருகின்றன. அதன் பின்னணியில் பலர் உள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம்.
போலீஸ் அதிகாரி

இந்தச் சூழலில், சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் பகுதியில், சில ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டியே கிடந்த தொழிற்சாலையில் திருட்டு நடப்பதாக இன்ஸ்பெக்டர் விஜயராகவனுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் டீமுடன் அவர் சம்பவ இடத்துக்குச் சென்றார்.

அப்போது 2 மினிலாரிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. போலீஸைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீஸார் மடக்கிப்பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கி என்கிற வெங்கட்ராஜ் (32), ஃபெலிக்ஸ் (30) , மணிகண்டன் (34) சந்துரு (27) எனத் தெரியவந்தது. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பழைய இரும்பு
பழைய இரும்பு
`எனக்கு குழந்தை பிறந்திருக்கு சார்!’ -நன்றி மறவாத தொழிலாளி; சென்னை-உ.பி ரயில் பயணத்தால் நெகிழ்ச்சி

இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் கூறுகையில், ``பட்டாரவாக்கத்தில் செயல்படாமலிருந்த தொழிற்சாலையில் செக்யூரிட்டி மேற்பார்வையாளராக செல்வராஜ் என்பவர் இருந்துவருகிறார். இவர், கடந்த 27-ம் தேதி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், 2 மினி லாரிகள் மூலம் 4 பேர் பழைய இரும்பு பொருள்களை தொழிற்சாலையிலிருந்து திருடியதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன்அடிப்படையில் விசாரணை நடத்தி 4 பேரை கைதுசெய்துள்ளோம்.

அவர்களிடமிருந்து 4 டன் எடையுள்ள பழைய இரும்புப் பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளோம். அதன்மதிப்பு, 2 லட்சத்து 24 ஆயிரமாகும். அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் மூடியே கிடக்கும் தொழிற்சாலைகளைக் குறிவைத்து பழைய இரும்புக்கடை நடத்திவரும் சிலர், தினமும் 4 டன் என்ற டார்க்கெட் நிர்ணயித்து திருடிவந்துள்ளனர். பெரும்பாலும் காயிலாங் கடை வியாபாரிகள்தான் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர். இவர்கள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இரும்புகளை திருடியிலிருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாக விசாரித்துவருகிறோம்" என்றனர்.

கைது செய்யப்பட்ட காயிலான் கடை வியாபாரி
கைது செய்யப்பட்ட காயிலான் கடை வியாபாரி

இந்தத் திருட்டு சம்பவம் குறித்து நம்மிடம் விவரித்த போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``தொழிற்பேட்டையில் உள்ள சில தொழிற்சாலைகள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அந்த தொழிற்சாலைகள் இயங்காமல் மூடியே கிடக்கின்றன. அதை குறிவைத்து சில கும்பல், காவலாளிகளுடன் கூட்டு சேர்ந்து அங்குள்ள பொருள்களைத் திருடிவந்துள்ளது. அதன் பின்னணியில் பலர் உள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். பட்டரவாக்கத்தில் உள்ள தொழிற்சாலையில் திருட வந்தவர்கள், தைரியமாக 2 மினி லாரிகளில் வந்தது சந்தேகத்தை தருகிறது" என்றார்.

கைதானவர்களுக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் கொரோனா பரிசோதனை செய்தபிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு