Published:Updated:

சென்னை: தாயின் கண் முன்னால் மகனுக்கு நடந்த கொடுமை! - மது போதையிலிருந்த 4 நண்பர்கள் கைது

மது

மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: தாயின் கண் முன்னால் மகனுக்கு நடந்த கொடுமை! - மது போதையிலிருந்த 4 நண்பர்கள் கைது

மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
மது

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், 70-வது பிளாக்கைச் சேர்ந்தவர் மாதவன் (21). இவர், தன்னுடைய நண்பர்கள் தீபன்ராஜ், ஆகாஷ்குமார், ஸ்ரீகுமார், சசிதரன் ஆகியோருடன் வியாசர்பாடி பகுதியில் கடந்த 27-ம் தேதி இரவு மது அருந்தினார். அப்போது மாதவனுக்கும் தீபன்ராஜுக்கும் இடையே போதையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தீபன்ராஜ், மாதவனை கத்தியால் குத்தினார். அதைத் தொடர்ந்து தீபன்ராஜ் அவருடன் மதுஅருந்தியவர்களும் மாதவனைத் தாக்கினர்.

மது
மது

மாதவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அதைப்பார்த்த தீபன்ராஜ் உள்பட 5 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் மாதவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்த எம்.கே.பி.நகர் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக மாதவனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர் அளித்த தகவலின்படி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, வியாசர்பாடியைச் சேர்ந்த தீபன்ராஜ் (20), ஆகாஷ்குமார் (22), சசிதரன் (19) உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கத்தியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் சிறுவன் ஒருவனையும் போலீஸார் பிடித்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

கைது
கைது
சித்தரிப்புப் படம்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாதவன் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, ``நான் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு புழல் பகுதியில் உள்ள கம்பெனியில் வேலைப் பார்த்து வருகிறேன். கடந்த 27-ம் தேதி எங்கள் வீட்டின் அருகில் உள்ள எஸ்.எம்.நகரில் தீபன்ராஜ் என்கிற குஞ்சுவாயன், ஆகாஷ், ஸ்ரீகுமார், சசிதரன் ஆகியோருடன் சேர்ந்து கறி வாங்கி மது அருந்தினோம். அப்போது தீபன்ராஜும் அவனுடன் இருந்தவர்களும் என் வீட்டில் உள்ளவர்களைப் பற்றியும் என் அம்மாவைப் பற்றியும் அசிங்கமாக பேசினார்கள்.

நான் பலமுறை கண்டித்தும் அவர்கள் கேட்கவில்லை. அதனால் நான் அங்கிருந்து புறப்பட்டு 64-வது பிளாக்கில் உள்ள கடை முன் மனவருத்தத்தில் உட்காந்திருந்தேன். அப்போது அங்கு என்னுடைய அம்மா ஜெயலட்சுமி வந்தார். அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது என்னைத் தேடி தீபன்ராஜ், ஆகாஷ், ஸ்ரீகுமார், சஞ்சய், சசிதரன் ஆகியோர் வந்தனர். அவர்கள் என்னை சுற்றி வளைத்தபடியே அசிங்கமாக பேசினர். பின்னர் கத்தியை எடுத்து சரமாரியாக குத்தினர். அதை தடுத்த என்னுடைய அம்மாவையும் அவர்கள் தள்ளி விட்டனர். அம்மா, என்னுடைய அலறல் சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் ஓடிந்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்" என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism