Published:Updated:

சென்னை: தாயின் நண்பரால் சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - ஊரடங்கில் தொடரும் கொடூரங்கள்

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை ( representational image )

சென்னை திருவொற்றியூரில் தாயின் நண்பர், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சம்பவம் 1:

சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றம்). இவரின் 17 வயது மகளிடம் முகநூல் மூலம் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் இருவரும் காதலித்திருக்கின்றனர். இந்தநிலையில், 11.4.2021-ல் வெங்கடேஷ், சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கிருஷ்ணகிரிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

மகளைக் காணவில்லை என்று திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கவிதா புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, கிருஷ்ணகிரியிலிருந்த கவிதாவின் மகளை மீட்டனர். பின்னர் விசாரணைக்காக வெங்கடேஷை போலீஸார் செனைக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்குப் பிறகு வெங்கடேஷை போலீஸார் கைதுசெய்தனர்.

சம்பவம் 2:

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பெண் ஒருவர், 17 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். அந்தப் பெண் வேலை பார்க்கும் இடத்தில் தாமோதரன் (33) என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில், 20.3.2021-ல் தாமோதரன், 17 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இது குறித்து சிறுமி, தன்னுடைய பாட்டியிடம் நடந்த சம்பவத்தைக் கூறி கதறி அழுதிருக்கிறார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

அதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பாட்டி, திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தாமோதரனிடம் விசாரணை நடத்தி அவரைக் கைதுசெய்தனர். கைதான வெங்கடேஷ், தாமோதரனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னை: பிரபல பாடகியின் மகளுக்குப் பாலியல் தொல்லை!-பாதிரியார் முதல் உறவினர்கள் வரை விசாரிக்க முடிவு

ஊரடங்கில் தொடரும் சம்பவங்கள்:

சென்னை, மாதவரம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி குடியிருந்துவருகிறார். பத்தாம் வகுப்பு படித்துவரும் அந்தச் சிறுமி 12.4.2021-ல் கடைக்குச் சென்றிருக்கிறார். அப்போது மாத்தூர் பகுதியைச் சேர்ந்த கந்தன் (34) என்பவர், சிறுமியின் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார். பின்னர் அவர் காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார். சிறுமி சத்தம் போட்டதும் கந்தன் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சிறுமி அவரின் தாயிடம் கூறியிருக்கிறார். ஆத்திரமடைந்த சிறுமியின் தாய், மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து சிறுமியிடம் அநாகரிகமாக நடந்த கந்தனை போலீஸார் கைதுசெய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்

கைது
கைது
Representational Image

சென்னை, அண்ணாநகர் காவல் மாவட்ட எல்லைக்குள் 17 வயது சிறுமி ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். சிறுமிக்குத் தெரிந்த முத்து என்பவர், தன்னைக் காதலிக்கும்படி நீண்ட நாள்களாக அவருக்குத் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார். 6.4.2021-ல் சிறுமி அண்ணா வளைவு பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது கந்தன், அவரின் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார். இது குறித்து சிறுமியின் அம்மா அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் முத்துவைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சிறுமியின் வீட்டின் அருகில் முத்து குடியிருந்திருக்கிறார். தற்போது அவர் வேறு இடத்துக்குக் குடியேறிவிட்டார். இருப்பினும் சிறுமியை ஒருதலையாகக் காதலித்த முத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதையடுத்து முத்துவை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

ஊரடங்கு காலகட்டத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் மட்டும் சென்னையில் போக்சோ சட்டத்தின் கீழ் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு