Published:Updated:

சென்னை: 'தாத்தாவால் பேத்திக்கு நேர்ந்த கொடூரம்!; தந்தையை சிறைக்கு அனுப்பிய மகள்!'

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை ( மாதிரிப் படம் )

சென்னையில் பேத்தியை கர்ப்பமாக்கிய தாத்தாவை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் குடியிருக்கும் பெண் ஒருவரின் 19 வயது மகளுக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் சில தினங்களுக்கு முன் மகளை அழைத்துக்கொண்டு அந்தப் பெண் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு 19 வயது மகளை பரிசோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். அதைக்கேட்டு அந்தப் பெண்ணின் அம்மா அதிர்ச்சியடைந்தார்.

கர்ப்பம்
கர்ப்பம்

பின்னர் மகளிடம் அம்மா விசாரித்தார். அப்போது தன்னுடைய கர்ப்பத்துக்கு அம்மா வழி தாத்தா பன்னீர்செல்வம்தான் காரணம் என மகள் அழுதப்படி கூறினாள். இதையடுத்து மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த பெண், தன்னுடைய தந்தையான பன்னீர்செல்வத்திடம் விசாரித்தார். அப்போது முன்னுக்குப் பின் முரணான தகவலை பன்னீர்செல்வம் கூறியதோடு இந்தப்பிரச்னை வெளியில் தெரிந்தால் குடும்பத்துக்குதான் அவமானம் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.

தன்னுடைய மகளின் எதிர்கால வாழ்க்கையை கேள்விகுறியாக்கிய தந்தை பன்னீர்செல்வத்துக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்க முடிவுசெய்தார் அந்தப் பெண். இதையடுத்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 19 வயது பெண்ணின் அம்மா, தன்னுடைய தந்தை பன்னீர்செல்வத்தின் மீது புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்திடம் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சென்னை: வீடியோ; மது; கூட்டு பாலியல் வன்கொடுமை! - ஒன்றரை ஆண்டுகளாக சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
கைது
கைது
representational image

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தாத்தாவால் கர்ப்பமடைந்த 19 வயது பெண்ணுக்குத் தந்தை இல்லை. அதனால் தாயுடன் தாய்வழி தாத்தா பன்னீர்செல்வத்தின் வீட்டில் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் 19 வயது பெண்ணின் அம்மா வேலைக்குச் சென்றுவிட்டார். அப்போது வீட்டில் 19 வயது பெண், அவரின் தங்கை, தாத்தா பன்னீர்செல்வம் ஆகியோர் மட்டும் இருந்திருக்கின்றனர். தங்கை விளையாட வெளியில் சென்ற சமயத்தில் "நான்தான் உங்களைக் காப்பாற்றுகிறேன். அமைதியாக நான் சொல்கிற படி கேள்" எனப் பேத்தியிடம் தாத்தா கூறியிருக்கிறார். மேலும், நான் சொல்கிறபடி கேட்கவில்லை என்றால் உன்னையும் உனது தங்கையையும் கொலை செய்துவிடுவேன் என பேத்தியை தாத்தா மிரட்டியிருக்கிறார். பின்னர் பேத்தி எனக்கூட பாராமல் அவரிடம் பாலியல் அத்துமீறலில் பன்னீர்செல்வம் ஈடுபட்டிருக்கிறார். அதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என தாத்தா பன்னீர்செல்வம் பேத்தியை மிரட்டியிருக்கிறார். தாத்தாவின் மிரட்டலுக்குப் பயந்த பேத்தியும் அமைதியாக இருந்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் பேத்தி கர்ப்பம் அடைந்திருக்கிறார். அதன்பிறகே தாத்தாவின் பாலியல் அத்துமீறல் விவகாரம் வெளியில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து பேத்தியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றத்துக்காக பன்னீர்செல்வம் (70) என்பவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு