Published:Updated:

சென்னை: வீட்டில் வேறு யாரும் இல்லாத நேரம்! - முதியவரால் 88 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை நெற்குன்றம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 73 வயது முதியவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. தலைநகர் சென்னையில் தினமும் ஒன்று அல்லது இரண்டு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுவருகின்றன. கடந்த மே மாதத்தில் 13 வழக்குகளும், ஜூன் மாதத்தில் 14 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 27 பேர் கைதுசெய்யப்பட்டனர். இன்னும் சில சம்பவங்கள் காவல் நிலையங்களிலேயே பஞ்சாயத்து செய்யப்படுவதால் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை.

போக்சோ சட்ட மசோதா
போக்சோ சட்ட மசோதா

சிறார்களும் இளம்பெண்களும் பாதிக்கப்பட்ட நிலையில், 88 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மூதாட்டிக்கு நடந்த கொடுமை குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``சென்னை நெற்குன்றம் பகுதியில் 88 வயதான மூதாட்டி ஒருவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 20.7.2021-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மூதாட்டியின் வீட்டின் அருகே குடியிருக்கும் முதியவர் பாலசுந்தரம் (73) என்பவர் மூதாட்டியின் வீட்டுக்கு சென்று பேசியிருக்கிறார். வீட்டில் யாரும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட முதியவர் பாலசுந்தரம் திடீரென முதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இது குறித்து மூதாட்டியின் மகன் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து பாலசுந்தரத்தைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

சம்பவம் 2:

சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் குடியிருக்கும் பெண்ணின் 7 வயது மகள் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் தங்கராஜ் (55) என்பவர் சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

சிறார் பாலியல் வன்கொடுமை
சிறார் பாலியல் வன்கொடுமை
சென்னை: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது! - ஊரடங்கில் அதிகரித்த போக்சோ வழக்குகள்

இது குறித்து சிறுமி தன்னுடைய அம்மாவிடம் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தங்கராஜிடம் விசாரணை நடத்தி, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு