Published:Updated:

`48 வயது தொழிலாளிக்கு 19 வயது மகளை திருமணம் செய்து வைத்த பெண்?!’ -தற்கொலைக்கு முயன்ற முதல் மனைவி

முதல் மனைவியுடன் கட்டடத் தொழிலாளி கண்ணன்
முதல் மனைவியுடன் கட்டடத் தொழிலாளி கண்ணன்

திருமணமான 48 வயது தொழிலாளிக்கு 19 வயது மகளை பெண் ஒருவர் திருமணம் செய்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்தவர் கண்ணன்(48). இவரின் மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கண்ணன் கட்டட வேலை செய்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்டடப் பணிக்குச் சென்றபோது செங்கல்பட்டுவைச் சேர்ந்த யுவராணி(45) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கண்ணன், முதல் மனைவியைப் பிரிந்து யுவராணியுடன் தங்கியிருந்தார்.

கட்டடத் தொழிலாளி கண்ணன்
கட்டடத் தொழிலாளி கண்ணன்

இந்நிலையில் யுவராணியின் 19 வயது மகளை கண்ணன் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சில மாதங்களுக்கு முன் முதல் மனைவி தரப்பில் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த மகளிர் போலீஸார், எந்தவிட நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கண்ணன் செங்கல்பட்டில் குடியிருந்துவந்தார்.

தற்போது சங்கர்நகர் காவல் நிலையத்தில் முதல் மனைவி மஞ்சுளாவின் மகள் புகாரளித்துள்ளார். அதில், கண்ணன் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீஸார், விசாரணை நடத்தி கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தத் தடவை கண்ணன் சிக்கியது எப்படி என்று போலீஸார் கூறுகையில், ``மஞ்சுளாவைத் திருமணம் செய்த கண்ணன், 2005-ம் ஆண்டு வந்தவாசிக்கு வேலைக்காகச் சென்றார். அப்போது 16-வயதுச் சிறுமியுடன் கண்ணனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியை அழைத்துக்கொண்டு கண்ணன், பெங்களூரு சென்றுவிட்டார்.

`வாட்ஸ் அப் காதல்...திருமண நிச்சயம்!’- இளைஞருக்கு அதிர்ச்சிகொடுத்த 40 வயதுப்  பெண் சிக்கிய பின்னணி
மூன்றாவது மனைவியுடன் கண்ணன்
மூன்றாவது மனைவியுடன் கண்ணன்

சிறுமியைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் விசாரித்தபோது பெங்களூரில் தங்கியிருந்த கண்ணன் மற்றும் சிறுமியைக் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தோம். அப்போது சிறுமி தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று காவல் நிலையத்தில் சொல்லப்பட்டதால் கண்ணன் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகுதான் செங்கல்பட்டுவைச் சேர்ந்த யுவராணியுடன் கண்ணனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பான புகாரில் கண்ணன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்தச் சூழலில்தான் கண்ணனுக்கும் யுவராணியின் 19 வயது மகளுக்கும் திருமணம் நடந்த தகவல் மஞ்சுளாவுக்குத் தெரிந்தது. அதனால் மன உளைச்சல் அடைந்த மஞ்சுளா, தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் உள்ளவர்கள் மஞ்சுளாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மஞ்சுளா அளித்த வாக்குமூலம் மற்றும் அவரின் மகள் அளித்த புகாரின்பேரில் கண்ணன் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாகப் பேசுவது, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்துள்ளோம்.

`நான் தவறு செய்துவிட்டேன்; ஆனால் பாஸுக்கு உண்மையாக இருந்தேன்!’ -போலி call centre-ன் பவர் பாயின்ட்
சங்கர்நகர் காவல் நிலையம்
சங்கர்நகர் காவல் நிலையம்

மஞ்சுளாவுக்கும் யுவராணிக்கும் ஏற்பட்ட தகராறில்தான் கண்ணனுக்குத் தன்னுடைய மகளை யுவராணி திருமணம் செய்துகொடுத்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. தற்போது யுவராணியின் மகள் தலைமறைவாக உள்ளார். அவரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளோம். அதன்பிறகுதான் கண்ணனுக்கும் யுவராணிக்கும் திருமணம் நடந்த தகவலை உறுதிப்படுத்த முடியும்" என்றனர். 48 வயதாகும் கண்ணனுக்கு 19 வயது இளம் பெண்ணுடன் திருமணம் நடந்த தகவல் முதல் மனைவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு