Published:Updated:

'கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட பெண்ணுக்குப் பாலியல் தொல்லை!' -சென்னையில் கொடூரம்!

 பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை ( Representational Image )

சென்னையில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

சென்னை பூக்கடை காவல் மாவட்டப் பகுதியில் வசித்துவருபவர் வனஜா (27) (பெயர் மாற்றம்). இவர் சென்னை பெருநகர மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கொரோனா தடுப்புப் பணியில் முன்களப்பணியாளராக வேலை பார்த்துவருகிறார். கடந்த 15-ம் தேதி காலை 9:45 மணியளவில் வனஜா, ஏழுகிணறு போர்ச்சுகீசியர் தெருவிலுள்ள வீடுகளுக்கு கொரோனா காய்ச்சல் பரிசோதனைக்காகச் சென்றிருக்கிறார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

அப்போது அந்தத் தெருவில் வசித்துவரும் சதகத்துல்லா என்பவர், காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும் என வனஜாவை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். சதகத்துல்லா கூறியதையடுத்து வனஜா மட்டும் தனியாக அவரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது சதகத்துல்லாவின் வீட்டில் யாரும் இல்லை. அதனால் தனிமையைப் பயன்படுத்திக்கொண்ட சதகத்துல்லா, காய்ச்சல் பரிசோதனை செய்துகொண்டிருந்த வனஜாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.

அதனால் அதிர்ச்சியடைந்த வனஜா அலறியடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் ஓடிவந்தார். வனஜாவின் அலறல் சத்தம் கேட்டு அந்தத் தெருவில் உள்ளவர்கள் சதகத்துல்லா வீட்டின் முன் திரண்டனர். பின்னர் பொதுமக்கள், வனஜாவிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது வீட்டுக்குள் நடந்ததை வனஜா, கூறினார்.

சென்னை: மெரினாவில் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ! - விசாகா கமிட்டி விசாரணை
கைது
கைது
Representational Image

இதையடுத்து சதகத்துல்லாவைப் (54) பிடித்து காவல் நிலையத்தில் அந்தத் தெருவில் உள்ளவர்கள் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வனஜாவின் அம்மா துறைமுகம் அனைத்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் சதகத்துல்லாவை விசாரணை செய்தனர். பின்னர் அவர்மீது வழக்கு பதிவு செய்து, கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் வடசென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு