Published:Updated:

காதலிக்க மறுத்த இளம்பெண்; ஆபாசப் புகைப்படங்களை அனுப்பி மிரட்டிய இளைஞர் கைது!

கைது
News
கைது

சென்னையில் 28 வயது இளம்பெண்ணைக் காதலிக்கும்படி டார்ச்சர் கொடுத்த 41 வயது தனியார் நிறுவன ஊழியரை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை மயிலாப்பூர் பகுதியில் வசித்துவருபவர் திவ்யா (28) (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். திடீரென அவர் வேலையிலிருந்து விலகினார். இந்தச் சூழலில் திவ்யாவின் இ-மெயிலுக்கும், அவரின் அம்மாவின் வாட்ஸ்அப் நம்பருக்கும் ஆபாச போட்டோக்கள் வந்தன. அதைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆபாசப் படம் குறித்து திவ்யாவிடம் அவரின் அம்மா விசாரித்தார். அப்போது, திவ்யா, ``நான் வேலை பார்த்த நிறுவனத்தில் பணியாற்றிய அஸ்வின் விக்னேஷ் (41) என்பவர் என்னைக் காதலிப்பதாகக் கூறினார். அதற்கு நான் மறுத்தேன். அதனால் அஸ்வின் விக்னேஷ், என்னை மிரட்டுவதற்காக ஆபாசப் படங்களை அனுப்பிவைத்திருக்கிறார்" என்று தன் அம்மாவிடம் தெரிவித்திருக்கிறார்.

மிரட்டல்
மிரட்டல்
சித்தரிப்புப் படம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த திவ்யாவின் அம்மா மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும், திவ்யாவின் இ-மெயிலுக்கும், அவரின் அம்மாவுக்கும் ஆபாசப் படங்களை அனுப்பிய இ-மெயில், செல்போன் நம்பர் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது ஆபாச போட்டோக்களை அனுப்பியது அஸ்வின் விக்னேஷ் எனத் தெரியவந்தது. அதனால் அவரை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடமிருந்து இரண்டு செல்போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அஸ்வின் விக்னேஷ், சென்னை பெரும்பாக்கத்தில் குடியிருந்துவருகிறார். தொடர்ந்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.