Published:Updated:

சென்னை: இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! - தற்கொலைக்குத் தூண்டியதாக பெண் ஒருவர் கைது

தற்கொலை

சென்னையில் சீட்டுப்பணத்தை திரும்ப செலுத்தாத இளம்பெண்ணை அவதூறாகப் பேசியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை: இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! - தற்கொலைக்குத் தூண்டியதாக பெண் ஒருவர் கைது

சென்னையில் சீட்டுப்பணத்தை திரும்ப செலுத்தாத இளம்பெண்ணை அவதூறாகப் பேசியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

Published:Updated:
தற்கொலை

சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் சரண்யா (34). இவர் கடந்த 23.4.2022-ம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதனால் அவரை மீட்டு மருத்துவமனையில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரண்யா 24-ம் தேதி உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து சரண்யாவின் கணவர் வேலு புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீஸார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கைது
கைது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``உயிரிழந்த சரண்யா, தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரிடம் சீட்டு போட்டிருக்கிறார். சீட்டு பணத்தை எடுத்த சரண்யா, அதை சரியாக செலுத்தவில்லை என்று தெரிகிறது. சம்பவத்தன்று சரண்யாவிடம் சாந்தி பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது சரண்யா பணத்தை கொடுக்காததால் அவரை அவதூறாக சாந்தி பேசியுள்ளார். அதன்காரணமாக மனவேதனையடைந்த சரண்யா, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சாந்தியை (50) போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்குப்பிறகு நீதிமன்றத்தில் சாந்தியை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism