Published:Updated:

சென்னை: `ரூ.2 லட்சம் கடன் ரூ.10 லட்சமானது..!' - `ஃபாஸ்ட் ஃபுட்' கடை உரிமையாளர் தற்கொலை செய்தது ஏன்?

தற்கொலை

சென்னையில் ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளர் சுதாகர், தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சென்னை: `ரூ.2 லட்சம் கடன் ரூ.10 லட்சமானது..!' - `ஃபாஸ்ட் ஃபுட்' கடை உரிமையாளர் தற்கொலை செய்தது ஏன்?

சென்னையில் ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளர் சுதாகர், தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
தற்கொலை

சென்னை, கொளத்தூர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் சுதாகர். இவரின் மனைவி மகேஷ்வரி (42). இவர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்படி விலாசத்தில் வசித்துவருகிறேன். நான் சென்னை அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலை செய்துவருகிறேன். என்னுடைய கணவர் சுதாகர், குன்றத்தூரில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்திவந்தார். என் கணவர், கடந்த 2013-ம் ஆண்டு வியாபாரத்துக்குப் பணம் தேவைப்பட்டதால் மைதிலி என்பவரிடம் இரண்டு லட்சம் ரூபாயைக் கடனாக வாங்கினார். அதற்காக அவர் என்னிடம் இரண்டு கையெழுத்திடாத செக்கை வாங்கினார். கடன் வாங்கும்போது இரண்டு சதவிகித வட்டி என்று கூறினார். ஆனால் கடன் வாங்கிய பிறகு மாதம் 10 சதவிகிதம் வட்டி கொடுக்க வேண்டும் என எங்களை மிரட்டினார்.

தற்கொலை
தற்கொலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கிடையில் மைதிலியின் உறவினர் ராஜன் என்பவர் எங்களுக்கு வீடுகட்டித் தருவதாகக் கூறி, பிறகு அந்தச் சொத்தை அபகரிக்க போலி ஆவணம் மூலம் செல்வகுமார் என்பவருக்கு பவர் வாங்கி அவரின் மனைவி மலர்விழி பெயரில் சொத்தை கிரையம் செய்துகொண்டார். அதனால் நான் அவர்கள்மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அதனால் கோபம் கொண்ட ராஜன், மைதிலி ஆகியோர் கூட்டுச் சேர்ந்து நான் ஏற்கெனவே கொடுத்திருந்த இரண்டு செக்குகளில் தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் என நிரப்பி வங்கியில் செலுத்தினர். ஆனால், என்னுடைய வங்கியில் பணம் இல்லாததால் செக் பவுன்ஸாகிவிட்டது. அதன் பிறகு எங்களை தொடர்ந்து அவர்கள் மிரட்டிவந்தார்கள். மேலும் பொய் வழக்கு போட்டு உன்னை வேலையைவிட்டு தூக்கிவிடுவேன் எனவும் மிரட்டிவந்தார்கள்.

கைது
கைது

அதனால் என் கணவர் மனவேதனையில் இருந்தார். இதையடுத்து அவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். என் கணவரின் மரணத்துக்குக் காரணமானவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவுசெய்து மைதிலியைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்.

சுதாகரின் வீடு பிரச்னை நடந்த இடம் செங்குன்றம் என்பதால், செங்குன்றம் போலீஸாரும் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர். டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்ட ஆபரேஷன் கந்துவட்டியின் கீழ் மைதிலி என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மைதிலியின் பின்னணி குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism