Published:Updated:

சென்னை: பெண் கொலை; பல மாதங்களுக்குப் பிறகு செல்போன் சிக்னலால் துப்பு துலக்கிய வழக்கு! - இளைஞர் கைது

இளைஞர் கைது

சென்னையில் ரூ.700-க்காக பெண் ஒருவர் கொடூரமாக கொலைசெய்யப்பட்டிருக்கிறார். அவரின் செல்போன் சிக்னலால் இந்தக் கொலை வெளியில் தெரியவந்திருக்கிறது.

சென்னை: பெண் கொலை; பல மாதங்களுக்குப் பிறகு செல்போன் சிக்னலால் துப்பு துலக்கிய வழக்கு! - இளைஞர் கைது

சென்னையில் ரூ.700-க்காக பெண் ஒருவர் கொடூரமாக கொலைசெய்யப்பட்டிருக்கிறார். அவரின் செல்போன் சிக்னலால் இந்தக் கொலை வெளியில் தெரியவந்திருக்கிறது.

Published:Updated:
இளைஞர் கைது

சென்னை தாம்பரத்தை அடுத்த அகரம் தென் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர் (51). இவரை கடந்த மே மாதம் 26-ம் தேதியிலிருந்து காணவில்லை. அதனால், எஸ்தரின் மகள் ஏஞ்சல், ஜூன் மாதம் 8-ம் தேதி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். இந்த நிலையில், கடந்த ஜூன் 19-ம் தேதி கோவிலாஞ்சேரி காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத பெண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக சேலையூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதனால் போலீஸார் அங்கு சென்று அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து சிவப்பு நிற ஜாக்கெட்டும், சந்தனகலர் புடவையையும் போலீஸார் கைப்பற்றினர். அது, தன்னுடைய அம்மா எஸ்தருடையது என ஏஞ்சல் உறுதிப்படுத்தினார். அதனால் இறந்தது எஸ்தர் என்று போலீஸார் முடிவு செய்து அவரின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர்.

கைதான  லோகநாதன்
கைதான லோகநாதன்

இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் எஸ்தர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. அதனால் எஸ்தர் மாயமான வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றினார். இந்தச் சமயத்தில் எஸ்தர் பயன்படுத்தி வந்த செல்போன் மாயமாகியிருந்தது. அதனால் அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ நம்பரை வைத்து போலீஸார் விசாரித்து வந்தனர். இந்தச் சூழலில் அந்த ஐ.எம்.இ.ஐ நம்பருடைய செல்போனை ஒருவர் பயன்படுத்துவது தெரியவந்தது. உடனடியாக அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், இந்த செல்போனை மப்பேடு, மதுரபாக்கம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (20) என்பவர் தன்னிடம் விற்றதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து லோகநாதனிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பவத்தன்று லோகநாதன் மதுபோதையில் தன்னுடைய வீட்டிற்கு கோவிலாஞ்சேரி காட்டுப்பகுதி வழியாகச் சென்றிருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் எஸ்தர், தனியாக நின்று பூ பறித்துக் கொண்டிருந்தார். அதைப்பார்த்த லோகநாதன், எஸ்தரை மிரட்டி அவரின் ஹேண்ட் பேக்கைப் பறித்திருக்கிறார். அப்போது எஸ்தருக்கும் லோகநாதனுக்கும் இடையே கடும் போராட்டம் நடத்திருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த லோகநாதன், எஸ்தரைக் கீழே தள்ளி அவரின் கழுத்தை நெரித்திருக்கிறார். இதில் எஸ்தர் உயிரிழந்தார்.

கொலை
கொலை

போதையிலிருந்த லோகநாதன், காட்டுப்பகுதியில் எஸ்தரின் சடலத்தை விட்டுவிட்டு அவரின் செல்போன், ஹேண்ட் பேக்கிலிருந்த 700 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். நீண்ட நாள்கள் கழித்தப்பிறகே எஸ்தர் கொலைசெய்யப்பட்ட தகவல் லோகநாதனுக்கு தெரியவந்திருக்கிறது. அதையடுத்து எஸ்தரின் செல்போனை லோகநாதன், குறைந்த விலைக்கு விற்று அந்தப் பணத்திலும் மது அருந்தியிருக்கிறார். செல்போன் மூலம் இந்தக் கொலையை துப்பு துலக்கி லோகநாதனைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.