Published:Updated:

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை - துணிச்சலாக செயல்பட்ட பெண் வக்கீலுக்கு குவியும் பாராட்டு!

பாலியல் தொல்லை

ஓடும் பேருந்தில் தனக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தவருக்கு தகுந்த பாடம் கற்பித்ததோடு, போலீஸிடமும் பிடித்துக் கொடுத்துள்ளார் வழக்கிறஞர் சித்ரா.

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை - துணிச்சலாக செயல்பட்ட பெண் வக்கீலுக்கு குவியும் பாராட்டு!

ஓடும் பேருந்தில் தனக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தவருக்கு தகுந்த பாடம் கற்பித்ததோடு, போலீஸிடமும் பிடித்துக் கொடுத்துள்ளார் வழக்கிறஞர் சித்ரா.

Published:Updated:
பாலியல் தொல்லை

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதைத் தடுக்க போதிய விழிப்புணர்வும், சட்ட நடவடிக்கைகளையும் போலீஸார் எடுத்துவருகின்றனர். இந்த நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் தாயுடன், சித்ரா (28) (பெயர் மாற்றம்) என்பவர் பயணம் செய்தார். அவரின் பின்இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர், பக்கவாட்டில் கையை விட்டு சித்ராவிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.

பாலியல் சீண்டல்
பாலியல் சீண்டல்

அதை தட்டிக்கேட்ட சித்ராவை அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கையால் தாக்கியுள்ளார். உடனடியாக சித்ரா சத்தம் போட்டுள்ளார். அதனால் பேருந்தின் டிரைவர், என்ன விவரம் என்று சித்ராவிடம் கேட்டபோது அவர் தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறியதோடு அருகில் உள்ள காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தும்படி கூறினார். அப்போது பேருந்து மதுரவாயல் காவல் நிலையம் அருகே சென்றுக் கொண்டிருந்தது. இதையடுத்து மதுரவாயல் காவல் நிலையத்துக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரவாயல் உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் சிவானந்தம் தலைமையில் போலீஸார் விசாரணையில் களமிறங்கினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் மதுரவாயல் காவல் நிலையத்தில் சித்ரா அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவருக்கு பேருந்தில் பாலியல் தொல்லைக் கொடுத்தவரை கீழே இறக்கி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் ராகவன் (41), கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. விசாரணைக்குப்பிறகு ராகவன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட ராகவன்
கைது செய்யப்பட்ட ராகவன்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``புகாரளித்த சித்ரா, வழக்கறிஞராக உள்ளார். இவர் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு அம்மாவுடன் சென்றார். பேருந்து புறப்பட்டதும் சித்ராவின் பின்இருக்கையில் அமர்ந்திருந்தவர், தன்னுடைய கையால் பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். அதை சித்ரா கண்டித்துள்ளார். அதன்பிறகும் தொடர்ந்து அந்த நபர் சித்ராவுக்கு தொல்லைக் கொடுத்ததும் தன்னிடமிருந்த சேஃப்ட்டி பின்னை எடுத்த சித்ரா அந்த நபரின் விரல்களில் குத்தியுள்ளார். அப்போது அதை தன்னுடைய செல்போனில் சித்ரா வீடியோவாக எடுத்திருக்கிறார். இதையடுத்து பேருந்தின் டிரைவர் மூலம் காவல்துறைக்கு சித்ரா தகவல் தெரிவித்தார். இந்தத் தகவல் கிடைத்ததும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராகவனை கைது செய்து விட்டோம்" என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையில் தனக்கு பேருந்தில் நடந்த கொடுமைகளை சித்ரா, முகநூலில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அதில், ``இரவு 10 மணியவில் நான் பேருந்து பயணம் செய்தபோது என் இருக்கைக்குப் பின்னால் அமர்ந்திருந்தவர், எனக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தார். நான் அமர்ந்திருந்த இருக்கைக்கும் ஜன்னலுக்கும் இடையே உள்ள வழியாக பகுதியில் கைகயை விட்ட அந்த நபர் என்னை தொட்டார். உடனடியாக நான் என்னுடைய செல்போனால் அவரின் கை விரல்களில் ஓங்கி அடித்தேன். அதனால் அவர் கையை எடுத்துவிட்டார். ஆனால் அதன்பிறகும் எனக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

நம்ம ஊரில் பெண்கள் புகார் கொடுத்தால் என்ன ஆதாரம் என்று கேட்கிறார்கள். அதனால் செல்போனில் வீடியோவை ஆன் செய்தேன். சேஃப்ட்டி பின்னால் விரல்களில் குத்திவிட்டு சத்தம் போட்டேன். உடனே அந்த நபர், என்னைப்பார்த்து நீதான் என்னுடைய கையைப்பிடித்து இழுத்தாய் என்று கூறினார். அதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அடுத்து ஒரு பொம்பளையாக இருந்துக் கொண்டு நீ எப்படி என்னை அடிக்கலாம் என்று அந்த நபர் கேட்டார். டிரைவரிடம் விவரத்தைக் கூறி பேருந்தை நிறுத்தும்படி தெரிவித்தேன். அப்போது பேருந்திலிருந்த சக பயணிகள், நேரமாகிவிட்டது. நடந்தது நடந்துவிட்டது. அந்த நபரை இறக்கி விடலாம் என்று கூறினர். அதற்கு நான் சம்மதிக்காமல் காவல்துறையினர் வரும்வரை காத்திருந்தேன். காவல் நிலையத்தில் நான் புகாரளித்த பத்து நிமிடங்களில் அந்த நபரை கைது செய்துவிட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் சிவானந்தம் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் ஒவ்வொரும் பெண்களுக்கும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாயின்ட் டூ பாயின்ட் பேருந்துகளில் பாதுகாப்பு கருதி டிரைவர்களை நியமிக்க வேண்டும் என்று முகநூலில் பதிவு ஒன்றை குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் சித்ராவின் பதிவைப் பாராட்டி, தங்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism