Published:Updated:

நடுரோட்டில் திருமணமான பெண்ணுடன் வலுக்கட்டாயமாக செல்ஃபி எடுக்க முயன்ற வழக்கறிஞர் - கைது செய்த போலீஸ்!

கைது ( சித்திரிப்புப் படம் )

சென்னை பிராட்வே பஸ் நிலையம் பகுதியில் திருமணமான பெண் வழக்கறிஞரின் கையைப் பிடித்து இழுத்து செல்ஃபி எடுக்க முயன்ற குற்றச்சாட்டுக்காக வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்தவர் பல்லவி (பெயர் மாற்றம்). 24 வயதாகும் இவர், வழக்கறிஞராக உள்ளார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடன் சட்டக்கல்லூரியில் படித்த சதீஷ் என்பவர் பல்லவியைக் காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதை பல்லவி கண்டித்தும், சதீஷ் கேட்காமல் தொடர்ந்து தொல்லைக் கொடுத்துள்ளார். இந்த நிலையில், 20.4.2022-ம் தேதி பிராட்வே பேருந்து நிலையம் பகுதியில் பல்லவி சென்றபோது வழக்கறிஞர் சதீஷ் அங்கு வந்துள்ளார்.

கைது
கைது
சித்திரிப்புப் படம்

பல்லவியைப் பின்தொடர்ந்துச் சென்ற சதீஷ், தன்னைக் காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். அதோடு நடுரோட்டில் பல்லவியின் கையைப் பிடித்து இழுத்து செல்போனில் செல்ஃபி எடுக்க வற்புறுத்தியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த பல்லவி, கணவரிடம் தகவலைத் தெரிவித்தார். இதையடுத்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பல்லவி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பிறகு வழக்கறிஞர் சதீஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism