Published:Updated:

வீட்டில் கோபித்துக்கொண்டு மெரினா சென்ற சிறுமி; ஆறுதல் கூறி அத்துமீறிய ஆட்டோ டிரைவர் கைது!

பாலியல் தொல்லை
News
பாலியல் தொல்லை ( சித்தரிப்புப் படம் )

ஆட்டோ டிரைவர் மூசாகலிமுல்லா, தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சிறுமி போலீஸாரிடம் தெரிவித்தார்.

பூக்கடை காவல் மாவட்டத்தில் குடியிருக்கும் 17 வயது சிறுமியை ஒருவர் கடந்த 11.12.2021-ம் தேதி முதல் காணவில்லை. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதில் வீட்டில் கோபித்துக்கொண்டு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். புகாரின் பேரில் போலீஸார் சிறுமி காணவில்லை என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர். இந்த நிலையில், காணாமல்போன சிறுமியை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மூசாகலிமுல்லா என்பவர் 14.12.2021-ம் தேதி மெரினா கடற்கரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து சிறுமியிடம் போலீஸார் விசாரித்தபோது வீட்டைவிட்டு வெளியில் சென்ற சிறுமி, மெரினா கடற்கரைக்குச் சென்றிருக்கிறார். அப்போது தனியாக சிறுமி நிற்பதை கவனித்த, ஆட்டோ டிரைவர் மூசாகலிமுல்லா அவரிடம் அன்பாகவும் ஆறுதலாகவும் பேசியிருக்கிறார். அதன் பிறகு சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றியிருக்கிறார். பின்னர், ஆட்டோ டிரைவர் மூசாகலிமுல்லா, தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி போலீஸாரிடம் தெரிவித்தார்.

கைது
கைது

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஆட்டோ டிரைவர் மூசாகலிமுல்லாவிடம் விசாரித்தனர். பின்னர் அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து அவரை சிறையில் அடைத்தனர்.