Published:Updated:

சென்னை: அக்கா கணவருடன் இணைந்த தங்கை! - 2-வது திருமணத்தால் ஆட்டோ டிரைவர் கைது

திருமணம்
திருமணம்

சென்னையில் மனைவி உயிரோடு இருக்கும்போது அவரின் தங்கையைத் திருமணம் செய்த ஆட்டோ டிரைவரை போலீஸார் கைதுசெய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை டி.பி.சத்திரம், மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (32). இவரின் மனைவி ரம்யா (29). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 28.6.2021-ம் தேதி புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார். இந்தநிலையில், 3.9.2021-ம் தேதி மீண்டும் ஒரு புகாரைக் கொடுத்தார். அதில், ``நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்துவருகிறேன். என்னுடைய கணவர் கணேஷ் ஆட்டோ ஓட்டிவருகிறார். எங்களுக்கு 2011-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. எங்களுக்கு 10 வயதில் மகன் இருக்கிறான். எங்களுக்குள் சிறு சிறு குடும்பப் பிரச்னைகள் வந்து, சரியாகிவிடும்.

திருமணம்
திருமணம்
Representational Image

என்னுடைய பெரியம்மா மகள் லோகநாயகி (26) வடபழனி திருநகரில் பெற்றோருடன் வசித்துவருகிறாள். அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவள் வீட்டுக்குச் சென்றபோது என் தங்கை லோகநாயகிக்கும், என் கணவர் கணேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதை நான் தட்டிக்கேட்டபோது எனக்கும் என் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதன் காரணமாக என் கணவர் கணேஷ், என்னிடம் அடிக்கடி சண்டை போட்டு என்னை அடித்து, துன்புறுத்திவந்தார். மேலும், என் தங்கை லோகநாயகியைத் தனக்குத் திருமணம் செய்துவைக்கும்படி கணேஷ் மருந்து குடித்தார். அப்போது லோகநாயகியின் பெயரை புலம்பினார். லோகநாயகியைத் திருமணம் செய்துவைக்கும்படி என்னை அவர் மிரட்டியதால், நான் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவந்தனர்.

``எனக்குத் திருமணம் நடக்காததால் கத்தியில் குத்தினேன்!" - திருமணமான காதலியைக் கொலை செய்த இளைஞர்!
முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

இந்தநிலையில், என் கணவரையும் தங்கை லோகநாயகியையும் கடந்த 28.6.2021-ம் தேதி முதல் காணவில்லை. தற்போது எனக்கு போன் செய்த என் கணவர், லோகநாயகியை திருவண்ணாமலை இளையநார் குப்பம் பெரியாயி கோயிலில்வைத்து திருமணம் செய்துவிட்டதாகத் தெரிவித்தார். எனவே, என்னை அடித்துக் கொடுமைப்படுத்தியதோடு, நான் உயிரோடு இருக்கும்போது வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட என் கணவர் கணேஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா உள்ளிட்ட போலீஸார் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 498(A), 494 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் கணேஷைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு