Published:Updated:

2 நாள்களுக்கு முன்பு கட்டிங்; ஃபேசியல் - சென்னையை அதிரவைத்த பியூட்டி பார்லர்ஸ் கொள்ளை கும்பல்

பியூட்டி ( freepik )

சென்னையில் உள்ள பியூட்டி பார்லர்களை டார்க்கெட் செய்து கொள்ளையடித்து வந்த இளைஞன் ஆகாஷ் தலைமையிலான கொள்ளைக் கும்பல் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன,

2 நாள்களுக்கு முன்பு கட்டிங்; ஃபேசியல் - சென்னையை அதிரவைத்த பியூட்டி பார்லர்ஸ் கொள்ளை கும்பல்

சென்னையில் உள்ள பியூட்டி பார்லர்களை டார்க்கெட் செய்து கொள்ளையடித்து வந்த இளைஞன் ஆகாஷ் தலைமையிலான கொள்ளைக் கும்பல் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன,

Published:Updated:
பியூட்டி ( freepik )

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்வர் சுந்தரமூர்த்தி. இவர், நொளம்பூர் காவல் நிலையத்தில் கடந்த 8-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``என்னுடைய சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, மணியம்பட்டு ஆகும். நான் தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். நான் கடந்த ஒரு மாதமாக நொளம்பூர், எஸ்.பி கார்டன், 2-வது மெயின் ரோடு பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறேன். இந்தக் கடையை திருவேற்காடு ராஜீ தெருவைச் சேர்ந்த ஜெய்சாரதி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்தக் கடையில் மோகன்ராஜ் என்பவர் முடி வெட்டுபவராகவும் நந்தினி வரவேற்பாளராகவும் ரேவதி முதுநிலை அழகு கலை நிபுணராகவும் பரிமளா, அம்மு, பிரியா ஆகியோர் பயிற்சி மாணவிகளாகவும் பணியாற்றி வருகின்றனர்.

அழகு நிலையம்
அழகு நிலையம்

நாங்கள் வழக்கமாக கடையை காலை 9 மணிக்கு திறந்து இரவு 8 மணிக்கு மூடுவோம். கடந்த 5-ம் தேதி திங்கள்கிழமை வழக்கம் போல கடையை திறந்து வேலை செய்து கொண்டிருந்தபோது கடையின் உள்ளே வந்து வரவேற்பாளரான நந்தினியிடம், `கட்டிங் சேவிங் மற்றும் ஃபேசிஸியல் பண்ண வேண்டும். அதற்கு எவ்வளவு ரேட் ஆகும்' என இரண்டு பேர் கேட்டிருக்கிறார்கள். அதற்கு நந்தினி ஒரு நபருக்கு 1,000 ரூபாய் ஆகும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர்கள், `நாங்கள் ஆறு பேரு உள்ளோம். ரேட்டை குறைச்சு சொல்லுங்க' என்று நந்தினியிடம் கூறியிருக்கிறார்கள். அதற்கு நந்தினி, நீங்கள் யார், உங்கள் பேர் என்ன என்று விசாரித்தபோது அதில் ஒருவன் தன்னுடைய பெயர் ரஞ்சித், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் என்று கூறியிருக்கிறார். மற்றொருவர் சித்தாலபாக்கத்தைச் சேர்ந்த ஆகாஷ் ராஜ் என்று கூறியுள்ளார். அதனால் நந்தினி, ஒரு நபருக்கு 500 ரூபாய் என்று சொல்லியதோடு ரஞ்சித்தை உள்ளே அனுப்பி கட்டிங் ஷேவிங் ஃபேசியல் செய்ய அனுமதித்திருக்கிறார். ஆகாஷ் ராஜ், 8-ம் தேதி மற்றவர்களுடன் வருவதாக தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து ரஞ்சித், ஆகாஷ்ராஜ் ஆகியோர் பணத்தைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் 8-ம் தேதி மாலை 4 மணியளவில் ரஞ்சித், ஆகாஷ் ராஜ் உள்பட ஆறு பேர் சலூனுக்கு வந்தார்கள். அதில் 22 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் ஃபேசியல் செய்ய வேண்டும் என்று நந்தினியிடம் கூறினார். இந்தச் சமயத்தில் ஆறுபேரில் ஒருவன், என்னுடைய (சுந்தரமூர்த்தி) கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான். பின்னர் கல்லாவில் உள்ள 2,000 ரூபாயை எடுத்தான். பின்னர் ரஞ்சித்தும் ஆகாஷ் ராஜூம் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தியையும் ரேவதியையும், `நீங்கள் விபச்சாரம்தானே செய்கிறீர்கள். நாங்கள் யாருன்னு தெரியுமா, பெரிய ரௌடிங்க எங்கள் பெயரைக் கேட்டாலே ஏரியாவில் உள்ளவர்கள் நடுங்குவார்கள்' என்று கூறியபடி நந்தினி அணிந்திருந்த வெள்ளி கொலுசு, ஒரு கிராம் மூக்குத்தி, ரேவதியிடமிருந்து முக்கால் பவுன் கம்மல், ஒரு கிராம் மூக்குத்தி, மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.

கொள்ளை
கொள்ளை

இதையடுத்து எங்கள் அனைவரையும் மிரட்டி மெடிகேர் ரூமில் உட்கார வைத்துக் கொண்டனர். பின்னர் மோகன்ராஜிடமிருந்து செல்போன், என்னிடமிருந்த செல்போன், பரிமளாவிடமிருந்த வெள்ளி மோதிரம், இரண்டு செல்போன்கள், அம்முவிடமிருந்த அரை கிராம் மூக்குத்தி, ஒரு கிராம் கம்மல், செல்போன், பிரியாவிடமிருந்து 5,000 ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டனர். அப்போது தற்செயலாக என்னைப் பார்க்க வந்த பாலமுருகன் என்பவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு செல்போன்கள், ஏடிம் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றையும் பறித்துக் கொண்டனர். பின்னர் இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உங்களை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிவிட்டு அவர்கள் வந்த பைக்குகளில் தப்பிச் சென்றுவிட்டனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். அழகு நிலையத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை விசாரிக்க அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த தனிப்படை போலீஸார், சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த ஆகாஷ் (19) என்பவரைக் கைதுசெய்தனர். மற்ற 5 பேரை போலீஸார் தேடிவருகிறார்கள். கைதான ஆகாஷிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கும் ஆகாஷ், பிளஸ் டூ வரை படித்திருக்கிறார். இவர் மீது ஏற்கெனவே தாம்பரம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள அழகு நிலையங்களில் ஊழியர்களை மிரட்டிப் பணம், நகைகளைப் பறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தச் சூழலில்தான் ஆகாஷ், தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து நொளம்பூரில் உள்ள அழகுநிலையத்தில் கைவரிசை காட்டியிருக்கிறார்.

கைதான ஆகாஷ்
கைதான ஆகாஷ்

ஆகாஷ் அளித்த தகவலின்படி அவரின் கூட்டாளிகளை பிடிக்க வியூகம் அமைத்திருக்கிறோம். இந்த வழக்கில் ஆகாஷ், ரஞ்சித்தான் டீம் லீடர்கள். இவர்கள் இணையதளம் மூலம் அழகுநிலையங்களின் விவரங்களை தேடி சேகரிப்பார்கள். அழகு நிலையங்களின் போன் நம்பர்களில் தொடர்பு கொள்ளும் ஆகாஷ், ரஞ்சித், தங்களின் சகோதரிக்கு மணப்பெண் அலங்காரம் செய்ய வேண்டும், எவ்வளவு கட்டணம் போன்ற விவரங்களை கேட்பார்கள். பின்னர், குறிப்பிட்ட தேதியை முன்பதிவு செய்துவிட்டு அன்றைய தினம் அங்குச் சென்று கைவரிசைக் காட்டுவார்கள். அழகு நிலையத்தில் பெரும்பாலும் பெண்கள் பணியாற்றுவதால் அவர்களை மிரட்டுவது ஈஸி என்பதாலே திட்டமிட்டு கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள். இந்த அழகுநிலைய கொள்ளைக் கும்பலிடம் நகை, பணத்தை இழந்த சிலர் புகாரளிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. கைதான ஆகாஷ் அளித்த தகவலின்படி அடுத்தகட்ட விசாரணை நடந்துவருகிறது, நொளம்பூரில் நடந்த சம்பவத்தில் 7750 ரூபாய், இரண்டரை சவரன் தங்க நகைகள், 25 கிராம் எடையுள்ள வெள்ளி பொருள்கள், 8 செல்போன்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றனர்.