Published:Updated:

சென்னை: பெங்களூரு, திருச்சி என போலீஸாரை அலைய வைத்த டிரைவர்! - மீட்கப்பட்ட 17 வயது சிறுமி

சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை ( representational image )

17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய கால்டாக்ஸி டிரைவர், அவரை பெங்களூரு, திருச்சி என அழைத்துச் சென்றுள்ளார். நீண்ட நெடிய போராட்டத்துக்குப்பிறகு சிறுமியை போலீஸார் மீட்டுள்ளனர்.

தென்சென்னையைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர் தனது 17 வயது மகளை காணவில்லை என ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜெ.ஜெ நகர் போலீஸார், வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடினர். சிறுமி குறித்து போலீஸார் விசாரித்த போது அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கால்டாக்ஸி டிரைவர் ஒருவருக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது.

சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை
representational image

உடனடியாக கால்டாக்ஸி டிரைவர் குறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அவரும் மாயமாகியிருந்தார். உடனடியாக செல்போன் சிக்னல் மூலம் போலீஸார் ட்ரேஸ் செய்தனர். அப்போது செல்போன் சிக்னல் பெங்களூரு எனக் காட்டியது. உடனடியாக போலீஸார் பெங்களூரு சென்றனர். போலீஸ் தேடிவருவதைக் தெரிந்த கால்டாக்ஸி டிரைவர் அங்கிருந்து எஸ்கேப் ஆனார். அதனால் போலீஸார் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பி வந்தனர்.

இந்தநிலையில் கால்டாக்ஸி டிரைவரின் செல்போன் சிக்னல் திருச்சியை காட்டியது. இந்தத் தடவை போலீஸார், முன்எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். திருச்சிக்குச் சென்ற போலீஸார் கால்டாக்ஸி டிரைவர், சிறுமி தங்கியிருக்கும் இடம் குறித்து ரகசியமாக விசாரித்தனர். அப்போது இருவரும் குளித்தலையில் தங்கியிருக்கும் தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்ற போலீஸார் சிறுமியை மீட்டனர். பின்னர் கால்டாக்ஸி டிரைவர் விஜய் (23) என்பவரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சென்னை :`என் மகனிடமிருந்து தூர்நாற்றம் வருகிறது' - 3 நாள்கள் சடலத்துடன் இருந்த ஹோமியோபதி டாக்டர்!
சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை
representational image

பின்னர் இருவரும் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஜானகி ஆகியோர் விஜய்யிடம் விசாரித்தனர். பின்னர் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஒரே பகுதி என்பதால் சிறுமியுடன் விஜய் பழகியுள்ளார். பின்னர் சிறுமியை காதலிப்பதாகக் கூறியுள்ளார். அதன்பிறகுதான் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி சிறுமியை பெங்களுருக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் திருச்சிக்கு வந்து இருவரும் தங்கியுள்ளனர். ஆசைவார்த்தைகளைக் கூறி சிறுமியை விஜய் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு