Published:Updated:

சென்னை: மாணவி கொடுத்த புகார் - போக்சோ சட்டத்தில் பேராசிரியர் கைது!

பேராசிரியர் லோகேஷ்
பேராசிரியர் லோகேஷ்

சென்னையில் மாணவி கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் பேராசிரியர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் நகரை சேர்ந்தவர் லோகேஷ் (26). இவர் எம்.பி.ஏ., ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரும்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். அதே கல்லூரியில் 17 வயதான மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்துவந்தார். அந்த மாணவிக்கும் லோகேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
Representational Image

மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பேராசிரியர் லோகேஷ் ஏமாற்றிவிட்டதாக மாணவியின் தரப்பில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து லோகேஷிடம் விசாரணை நடத்தினார். விசாரணயில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில்,``பேராசிரியர் லோகேஷுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு நடந்துவருகிறது. இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயம் செய்ய தேதி குறிக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பான போட்டோவை லோகேஷ் தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்திருக்கிறார். இதைப் பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்தார். பிறகு, லோகேஷிடம் மாணவி போனில் பேசியபோது, அவர் பதிலளிக்கவில்லை. அதன் பிறகே லோகேஷ் குறித்த விவரத்தை வீட்டில் மாணவி கூறியிருக்கிறார். அதன்பேரில் லோகேஷ் மீது காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகாரளிக்கப்பட்டது.

கர்ப்பமான 17 வயதுச் சிறுமிக்கு திருமணம்? - போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதான டிரைவர்
கைது
கைது
Representational Image

விசாரணைக்குப் பிறகு லோகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். புகாரளித்த மாணவிக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டிருக்கிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு