Published:Updated:

சென்னை: வாடகை தராத வட இந்தியத் தொழிலாளர்களுக்கு பைப்பால் அடி; தே.மு.தி.க பிரமுகர் கைது!

தே.மு.தி.க  பிரமுகர் சுரேஷ் ராஜ்
தே.மு.தி.க பிரமுகர் சுரேஷ் ராஜ்

சென்னை குன்றத்தூர் பகுதியில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்களிடம் வாடகைப் பணம் கேட்டு அவர்களைத் தாக்கிய தே.மு.தி.க பிரமுகரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை திருமுடிவாக்கம், சரோஜினி தெருவில் வசித்துவந்தவர் ஒடிசாவைச் சேர்ந்த பிரதீப்குமார் ஜனா (25). இவரின் சகோதரர் சஞ்சய்குமார் சாகு. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனங்களுக்கு வடமாநில இளைஞர்களை வேலைக்கு அனுப்பிவைக்கும் நிறுவனத்தை நடத்திவந்தனர். அதன் காரணமாக 30-க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் சரோஜினி தெருவிலுள்ள சுரேஷ் ராஜ் என்பவர் வீட்டில் தங்கியிருந்தனர்.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக வாடகைப் பணத்தை பிரதீப்குமார் ஜனா கொடுக்கவில்லை. அதனால் வாடகைப் பணத்தை வீட்டின் உரிமையாளரும், காஞ்சிபுரம் மாவட்ட தே.மு.தி.க கேப்டன் மன்ற துணைச் செயலாளருமான சுரேஷ் ராஜ் (40) கேட்டு வந்தார். இந்தநிலையில், வீட்டில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்லும் தகவல் சுரேஷ் ராஜுக்குத் தெரியவந்தது.

அதனால் 16.5.2021-ல் பிரதீப்குமார் ஜனாவிடமும், அவருடன் தங்கியிருந்த வடமாநில இளைஞர்களிடமும் வாடகைப் பணம் கேட்டிருக்கிறார் சுரேஷ் ராஜ். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் ராஜ், மூன்றடி நீளமுள்ள பிளாஸ்டிக் பைப்பை எடுத்து பிரதீப்குமாரையும், அவருடன் தங்கியிருந்த இளைஞர்களையும் தாக்கியிருக்கிறார்.

கைது
கைது
Representational Image
``கொரோனா சிகிச்சையை நிறுத்தச் சொல்லி மிரட்டுறாங்க!” - முன்னாள் தலைமைச் செயலாளர் மீது பகீர் புகார்

அதைச் சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கின்றனர். அந்த வீடியோ வைரலானதும், குன்றத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். பின்னர் பிரதீப்குமார் ஜனா, குன்றத்தூர் காவல் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் சுரேஷ் ராஜ் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் ராஜைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவில், தே.மு.தி.க பிரமுகர் சுரேஷ்ராஜ், கையில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பைப்பால் வடமாநில இளைஞர்களைத் தாக்கும்போது சிலர் முட்டி போட்டிருக்கின்றனர். இன்னும் சிலர் அடிக்காதீர்கள் என்று அவரிடம் கெஞ்சுகின்றனர். அதன் அடிப்படையில்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குன்றத்தூர் திருமுடிவாக்கம் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு