Published:Updated:

சென்னை: மூன்றரை ஆண்டுகளில் 9 வீடுகள்; 65 சவரன் நகை - காருக்கு இ.எம்.ஐ செலுத்தத் திருடிய டிரைவர்!

டிரைவர் பாலாஜியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்
News
டிரைவர் பாலாஜியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்

சென்னையில் காருக்கு இ.எம்.ஐ செலுத்த முடியாமல் சிரமப்பட்ட டிரைவர் பாலாஜி, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு, மூன்றரை ஆண்டுகளில் ஒன்பது வீடுகளில் கைவரிசை காட்டியிருக்கிறார். அவரிடமிருந்து 65 சவரன் தங்க நகைகள், மூன்று கிலோ வெள்ளிப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

சென்னை, குன்றத்தூரை அடுத்த கோவூர், தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர், கடந்த 10.10.2020-ல் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றார். மறுநாள் (11.10.2020) வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 7 1/2 சவரன் தங்க நகைகள், இரண்டு கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவை கொள்ளைபோயிருந்தன.

கொள்ளை
கொள்ளை
Representational Image

இது குறித்து சந்தோஷ், குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் அம்பத்தூர் துணை கமிஷனர் தீபா சத்யன் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் காண்டீபன், ஹரி மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் கொள்ளை நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வுசெய்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது லுங்கி, பனியன் அணிந்து செல்லும் இளைஞர் ஒருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. சிசிடிவி கேமராப் பதிவுகள் அடிப்படையில் போலீஸார் விசாரித்தபோது பம்மல் பகுதி வரை அந்த இளைஞர் சென்றது தெரியவந்தது. இதையடுத்து பம்மல் பகுதியில் விசாரித்தபோது, பம்மல், கவுல்பஜாரைச் சேர்ந்த பாலாஜி (25) என்பவர் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. அவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

 திருட்டு
திருட்டு
representational image

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கொள்ளை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாலாஜி, கார் டிரைவராக இருக்கிறார். இவர் சொந்தமாக கார் ஒன்றை லோன் வாங்கி ஓட்டிவந்திருக்கிறார். அதற்கு மாதத் தவணையை முறையாகச் செலுத்த முடியவில்லை. அதனால், இ.எம்.ஐ செலுத்த என்ன செய்வது என்று பாலாஜி யோசித்திருக்கிறார். அப்போதுதான் அவர் பூட்டிய வீடுகளில் கொள்ளையடிக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து பகல் நேரத்தில் பைக்கில் பூட்டிய வீடுகளை நோட்டமிடுவார். பிறகு இரவில் பனியன், லுங்கி அணிந்துகொண்டு அந்த வீட்டுக்குச் செல்வார். அதன் பிறகு பூட்டை உடைத்து, கொள்ளையடித்துவிட்டுத் தப்பிவிடுவார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக கொள்ளைச் சம்பவத்தில் பாலாஜி ஈடுபட்டுவந்திருக்கிறார். சந்தோஷ் என்பவரின் வீட்டில் மட்டுமல்லாமல் பூந்தமல்லி, மாங்காடு பகுதியில் ஒன்பது வீடுகளில் பாலாஜி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் இதுவரை அவர் சிக்கவில்லை.

சிசிடிவி
சிசிடிவி
representational image

முதல் தடவையாக தற்போது சிக்கியிருக்கிறார். கொள்ளையடித்த நகைகள், பொருள்களை விற்று கார் லோனைச் செலுத்தியிருக்கிறார். பிறகு புதிதாக கார் ஒன்றையும் வாங்கியிருக்கிறார். மனைவிக்கு நகைகளைப் பரிசாக வாங்கிக் கொடுத்திருக்கிறார். கைதுசெய்யப்பட்ட பாலாஜியிடமிருந்து 65 சவரன் தங்க நகைகள், மூன்று கிலோ வெள்ளிப் பொருள்கள், கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம்’’ என்றனர்.