Published:Updated:

`நான்தான் ஹீரோ'; பிரபலங்களின் பெயரில் ஃபேஸ்புக் ஐடி! - கடலூர் இன்ஜினீயரிடம் ஏமாந்த 20 பெண்கள்

சைபர் க்ரைம் - பாலியல் தொல்லை
சைபர் க்ரைம் - பாலியல் தொல்லை ( மாதிரி படம் )

``சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகளுக்கு அதிக ரசிகர்கள், ரசிகைகள் இருப்பதைப் பார்த்ததும் அதன்மூலம் பெண்களுக்கு வலைவிரித்தேன்" என்று இன்ஜினீயர் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவுக்கு வந்த பெண்கள், பரபரப்பான புகார்களைக் கொடுத்தனர். அதில், ``டி.வி.சீரியல் ஒன்றில் ஹீரோவாக நடித்துவரும் ஒருவரின் புகைப்படத்தோடுகூடிய ஃபேஸ்புக் ஒன்றிலிருந்து எங்களுக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வந்தது. அதனால் நாங்களும் அதை அக்செப்ட் செய்தோம். அதன்பிறகு கருத்துகளையும் புகைப்படங்களையும் ஷேர் செய்தோம். இந்தச் சமயத்தில் அந்த ஹீரோ, எங்களின் செல்போன் நம்பர்களைக் கேட்டார். அவரை நம்பி போன் நம்பர்களைப் பகிர்ந்தோம்.

பெண்களுக்கு எதிரான  வன்கொடுமை
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை
`போலி டேட்டிங் இணையதளம்... ரூ.18 லட்சத்தைப் பறிகொடுத்த இளைஞர்'- அதிரடி காட்டிய சைபர் க்ரைம்!

இதையடுத்து அந்த ஹீரோ எங்களுடன் போனில் பேசினார். அதனால் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். இந்தச் சமயத்தில் அந்த ஹீரோவிடம் எங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்தோம். அவரும் முகம் தெரியாத அவரின் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை எங்களுக்கு அனுப்பி வைத்தார். அப்போதுதான் ஏன் முகம் தெரியாத புகைப்படங்கள் வீடியோக்களை அனுப்பி வைத்தீர்கள் என்று கேட்டதற்கு, நான் பிரபலமான ஹீரோ, அதனால்தான் முகம் தெரியாத படங்கள், வீடியோக்களை உங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று கூறினார்.

புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்தபிறகு அந்த ஹீரோ தரப்பிலிருந்து எங்களுக்கு மிரட்டல் போன் அழைப்புகள் வந்தன. பணம் கொடுக்கவில்லை என்றால் உங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை சமூகவலைதளங்களில் பகிருவேன் என்று கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தோம். இதில் சிலர் அவர் கேட்ட பணத்தை அனுப்பி வைத்தோம். தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட ஹீரோ மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

இன்ஜினீயர் விக்னேஷ்
இன்ஜினீயர் விக்னேஷ்

இந்தப் புகாரையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் நாகஜோதி மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார், உதவி கமிஷனர் வேல்முருகன், இன்ஸ்பெக்டர் அனுசுயா கொண்ட தனிப்படையினர் ஃபேஸ்புக் குறித்து விசாரித்தனர். விசாரணையில் பிரபலமான சீரியல் ஹீரோவின் போலி ஃபேஸ்புக் ஐடி என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த ஐடியைத் தொடங்கியது யாரென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் விக்னேஷ் (33), விருத்தாசலத்தை அடுத்த கொம்மனாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. இதையடுத்து விக்னேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``விருத்தாசலத்தைச் சேர்ந்த விக்னேஷ், இன்ஜினீயரிங் படித்துள்ளார். இன்ஜினீயரிங் படிப்பில் அரியர்ஸ் உள்ளதால் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது சமூகவலைதளங்களில் அதிக நேரம் செலவழித்த விக்னேஷ், சினிமா, சீரியல் நடிகர்கள், நடிகைகளின் ஃபேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம், ட்விட்டர் ஆகியவற்றில் அதிகமான ரசிகர்கள், ரசிகைகள் இருப்பதைப் பார்த்துள்ளார். அதனால் பிரபலமானவர்களின் பெயரில் போலி ஃபேஸ்புக் ஐடிக்களைத் தொடங்கியுள்ளார். அந்த ஐடி-களுக்கு அதிகளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால், அந்த ஐடி-கள் மூலம் தன்னுடைய சுயரூபத்தை விக்னேஷ் வெளிப்படுத்த தொடங்கியுள்ளார்.

``3 சிம்கார்டுகள்; ஒரே ஒரு செல்போன்!"- விடிய விடிய பெண் குரலில் பேசிய நெல்லை இன்ஜினீயர்
எனக்கு வேலை எதுவும் இல்லை. அதனால்தான் விளையாட்டாக முதலில் பிரபலங்களின் பெயரில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற கணக்குகளைப் போலியாகத் தொடங்கினேன். அதற்கு ரசிகர்கள், ரசிகைகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
இன்ஜினீயர் விக்னேஷ்
ஃபேஸ்புக் | Facebook
ஃபேஸ்புக் | Facebook

பிரபலமான சீரியலில் ஹீரோவாக நடித்துவரும் ஒருவரின் பெயரில் போலியாக ஃபேஸ்புக் ஐடியைத் தொடங்கிய விக்னேஷ், அதன் மூலம் பெண்களுக்கு வலைவிரித்துள்ளார். உண்மையிலேயே அந்த ஹீரோவின் ஃபேஸ்புக் கணக்கு என நம்பிய பெண்கள் முதலில் நட்பாகப் பழகியுள்ளனர். பின்னர், விக்னேஷ், அந்தப் பெண்களிடம் போனில் பேசி அவர்களின் தனிப்பட்ட வீடியோக்கள், போட்டோக்களை தன்னுடைய செல்போனுக்கு அனுப்பும்படி கூறியுள்ளார். சில பெண்கள், விக்னேஷ் கூறியதுபோல அனுப்பி வைத்துள்ளனர். அந்தப் பெண்களுக்குத் தன்னுடைய போட்டோஸ்களை விக்னேஷ் அனுப்பியுள்ளார். அதன்பிறகு போட்டோஸ்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாகக் கூறி விக்னேஷ் மிரட்டத் தொடங்கியுள்ளார். பொறியில் சிக்கிய எலியாகத் தவித்த பெண்களில் சிலர் விக்னேஷின் உறவினரின் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

பணம் வந்த பிறகும் விக்னேஷ், அந்தப் பெண்களை நேரில் சந்திக்க வேண்டும் என மிரட்டத் தொடங்கியுள்ளார். அதில் சில பெண்கள் நேரிலும் சந்தித்துள்ளனர். விக்னேஷால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் மட்டும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தனர். இதையடுத்து விக்னேஷைக் கைது செய்து அவரிடமிருந்து லேப் டாப், செல்போன்களைப் பறிமுதல் செய்துள்ளோம்.

`பெண் குரலில் வலை; வெளிநாட்டு கஸ்டமர்கள்!' -சென்னை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நெல்லை இன்ஜினீயர்
சமூக வலைதளங்களில் தங்களின் தனிப்பட்ட புகைப்படங்களைப் பதிவேற்ற வேண்டாம். அந்தப் புகைப்படங்களை சிலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. பெண்கள், குழந்தைகள் எச்சரிக்கையாகச் செயல்பட்டால் சைபர் க்ரைம் குற்றங்களில் சிக்குவதைத் தவிர்க்கலாம்
சென்னை மத்திய குற்றப்பிரவு போலீஸ்
பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைமில் முதல் முறையாக விக்னேஷ் மீது XVI of 1982 cyber law என்ற சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``இந்த வழக்கின் தன்மையை அறிந்த, சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தமிழ்நாடு சட்டம் 1982 சட்டப்பிரிவு 14 சைபர் சட்டப்படி விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி விக்னேஷ் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தச் சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டம் போல ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுக்குப் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பவர்கள் முதன்முறையாக சிக்கினாலும், அவர்கள் மீது சைபர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குண்டர் சட்டத்தைப் போலவே ஓராண்டு ஜாமீன் பெற முடியாது. மேலும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தைப் போல அறிவுசார் கழகத்தில், தமிழ்நாடு சட்டப்பிரிவு 16ன்படி போடப்பட்ட சைபர் சட்டத்தை ரத்து செய்ய முறையிடலாம்.

பொதுவாக பெண்கள் அறிமுகம் இல்லாதவர்களுக்குத் தங்களின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுப்பக்கூடாது. குறிப்பாக சமூகவலைதளங்களில் தங்களின் தனிப்பட்ட புகைப்படங்களைப் பதிவேற்ற வேண்டாம். அந்தப் புகைப்படங்களை சிலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. பெண்கள், குழந்தைகள் எச்சரிக்கையாகச் செயல்பட்டால் சைபர் க்ரைம் குற்றங்களில் சிக்குவதை தவிர்க்கலாம்" என்றார்.

Twitter| ட்விட்டர்
Twitter| ட்விட்டர்
Pinterest

விக்னேஷிடம் போலீஸார் விசாரித்தபோது, ``வேலை எதுவும் இல்லை. அதனால்தான் விளையாட்டாக முதலில் பிரபலங்களின் பெயரில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற கணக்குகளை போலியாகத் தொடங்கினேன். அதற்கு ரசிகர்கள், ரசிகைகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் ரசிகைகளை ஏமாற்றி பணம் பறித்தேன். இதற்காக சில பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்தேன். பணம் அனுப்பாத பெண்களை நேரில் சந்தித்து மிரட்டினேன்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு