Published:Updated:

சென்னை: பைக்கில் சென்ற பெண் பத்திரிகையாளர்! - தொல்லை கொடுத்த அமெரிக்க `ரிட்டர்ன்’ இன்ஜினீயர் கைது

இன்ஜினீயர் கார்த்திக்
இன்ஜினீயர் கார்த்திக்

சென்னை அண்ணாநகரில் பைக்கில் சென்ற பெண் பத்திரிகையாளருக்கு காரில் சென்ற அமெரிக்காவில் வேலைபார்க்கும் இன்ஜினீயர் ஒருவர் தொல்லை கொடுத்ததாகக் கைதுசெய்யப்பட்டார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்துவருகிறார். இவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `நான், மாலையில் அண்ணா நகர் 2-வது அவென்யூவிலுள்ள ஐயப்பன் கோயில் அருகே பைக்கில் வந்துகொண்டிருந்தேன். அப்போது காரில் வந்த இளைஞர் ஒருவர் என்னை வழிமறித்தார். பின்னர் அவர் என்னிடம் அநாகரிகமாகப் பேசினார். எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

சிசிடிவி
சிசிடிவி

அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது இளம்பெண் குற்றம்சாட்டியதுபோல காரில் வந்த இளைஞர், அவரை வழிமறித்துப் பேசும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த காரின் பதிவு நம்பரைவைத்து யார் அந்த இளைஞர் என போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் கார்த்திக் (34), சென்னை அண்ணா நகர் 12-வது பிரதான சாலைப் பகுதியில் குடியிருக்கிறார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த முகவரிக்குச் சென்ற போலீஸார் கார்த்திக்கிடம் இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவலின்படி விருப்பமின்றி பெண்ணைத் துன்புறுத்துதல் சட்டப்பிரிவின் கீழ் கார்த்திக் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கார்த்திக், அமெரிக்காவிலுள்ள ஐடி நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை பார்த்துவருகிறார். அவர் சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில்தான் இந்தக் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார். இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கார்த்திக்கை போலீஸார் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை: ஓடும் காரிலிருந்து வீசப்பட்டதா பெண்ணின் சடலம்? - அதிரவைக்கும் சிசிடிவி
ட்விட்டர் பதிவு
ட்விட்டர் பதிவு

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண், தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சில தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார். அதில், என்ன நடந்தது என்பதைக் குறிப்பிட்டிருக்கும் இளம்பெண், `சம்பவம் நடந்த இடத்தின் அருகிலுள்ள போக்குவரத்து காவலரிடம் விவரத்தைக் கூறினேன். அப்போது அவர் ரவுண்டானா அருகில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை இருப்பதாகவும் அங்கு தகவலைச் சொல்லும்படி கூறினார். அங்கு நான் சென்றபோது யாரும் இல்லை. இதையடுத்து தகவலை போலீஸாரிடம் தெரிவித்த பிறகு இன்று காலை உதவி கமிஷனர் அகஸ்டின் என்பவர் என்னிடம் பேசினார். அப்போது அவர், உங்களிடம் தகராறில் ஈடுபட்டவரைப் பிடித்துவிட்டோம் என்ற தகவலைக் கூறினார். போலீஸார் துரிதமாக நடவடிக்கை எடுத்ததற்கு உதவி கமிஷனர் அகஸ்டின், எஸ்.ஐ செல்லத்துரை மற்றும் போலீஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவு செய்திருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு