Published:Updated:

சென்னை: மாணவிகள், பெண்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தொழிலதிபர் மகன்! - போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

பரசுராமன்
பரசுராமன்

பெண்களின் புகைப்படங்களை மார்பிங் மூலம் ஆபாசமாகச் சித்திரித்த இன்ஜினீயரிங் மாணவனை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர், ஃபேஷன் டெக்னாலஜி படித்துவருகிறார். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களைப் படிப்பு தொடர்பாக பயன்படுத்திவருகிறார். இந்தநிலையில் மாணவிக்கு அதிர்ச்சி தரக்கூடிய ஒரு தகவல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்தது. அதைப் பார்த்த மாணவி தன்னுடைய பெற்றோரிடம் விவரத்தைக் கூறினார்.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்
representational image

இதையடுத்து இன்ஸ்டாகிராமில் மார்பிங் செய்யப்பட்ட மாணவியின் ஆபாசப் புகைப்படங்களை யார் பதிவு செய்தது என்பதைக் கண்டறிய ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் ராயப்பேட்டை மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

`மார்பிங் போட்டோ; பணம் கேட்டு மிரட்டல்!’ - ஃபேஸ்புக் நண்பரால் அதிர்ச்சியடைந்த  நர்ஸ்

மேலும், மயிலாப்பூர் சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை நாடினர். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மார்பிங் செய்யப்பட்ட மாணவியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்த ஐபி முகவரியை போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் சேலம் அஷ்தம்பட்டியைச் சேர்ந்த பரசுராமன் (19) என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் மாணவியின் புகைப்படங்களை மார்பிங் செய்திருந்தார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது பரசுராமன் குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

லேப்டாப்
லேப்டாப்
representational image

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``பரசுராமன் பயன்படுத்திய ஐபி முகவரியிலிருந்துதான் சென்னை மாணவியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன. உடனடியாக பரசுராமனிடம் விசாரித்தோம். அப்போதுதான் அவர் சென்னை மாணவி மட்டுமல்லாமல், மேலும் சில பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவு செய்திருந்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைதுசெய்தோம். அவர் மீது போக்சோ மற்றும் ஐடி சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம்.

சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் பெண்களின் புகைப்படங்களை எடுத்து, அதைப் பொழுதுபோக்குக்காக பரசுராமன் மார்பிங் செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். புகார் கொடுத்த சென்னை மாணவி, பரசுராமனுக்கு நெருங்கிய உறவினர். அதனால் மாணவி குறித்த முழு விவரங்கள் பரசுராமனுக்குத் தெரியும். அப்படியிருந்தும் மாணவியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களிலிருந்து எடுத்த பரசுராமன், அதை மார்பிங் செய்ய தன்னுடைய செல்போனில் பிரத்யேமாக ஆப்ஸ் ஒன்றைப் பதிவு செய்து வைத்திருந்தார். அதன் மூலம் மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அவற்றைச் சமூக வலைதளங்களில் பதிவுசெய்திருக்கிறார்.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்
representational image

பரசுராமனின் அப்பா தொழிலதிபர். அதனால் பரசுராமனுக்கு தனியறை, விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார், மேலும் பரசுராமன், கோவையிலுள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவருகிறார். கொரோனா பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட பரசுராமனை சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு