Published:Updated:

சென்னை: டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டுகள் - மோசடிக் கும்பல் சிக்கியது எப்படி?

கள்ள நோட்டு

சென்னை கிண்டியில் டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற சம்பவத்தில் கள்ள நோட்டு கும்பலை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

சென்னை: டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டுகள் - மோசடிக் கும்பல் சிக்கியது எப்படி?

சென்னை கிண்டியில் டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற சம்பவத்தில் கள்ள நோட்டு கும்பலை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
கள்ள நோட்டு

சென்னை கிண்டியிலுள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 16.3.2022-ம் தேதி 200 ரூபாய் கொடுத்து ஒருவர் மதுபானம் வாங்கினார். அது கள்ள நோட்டு எனத் தெரிந்ததும் டாஸ்மாக் ஊழியர், கிண்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து கள்ள நோட்டை மாற்ற முயன்றதாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அஜாஸ்கான் (38) என்பவரைப் போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் இரண்டு 200 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பிரபு
பிரபு

பின்னர் அஜான்கானை போலீஸார் கைதுசெய்து விசாரித்தபோது சென்னை அண்ணாசாலையைச் சேர்ந்த அம்ருதின் (36) என்பவர் கள்ள நோட்டுகளைக் கொடுத்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் 92 எண்ணிக்கைகொண்ட 200 ரூபாய் கள்ள நோட்டுகளும், ஒரு 500 ரூபாய் கள்ள நோட்டும் இருந்தன. இதையடுத்து அதைப் பறிமுதல் செய்த போலீஸார் அம்ருதினையும் கைதுசெய்து கள்ள நோட்டுகளை மாற்றப் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து இருவரையும் போலீஸார் கடந்த 17.3.2022-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கள்ள நோட்டு கும்பல் குறித்து கிண்டி போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில் ``அம்ருதீன் அளித்த தகவலையடுத்து சிட்லபாக்கம் அண்ணாதெருவைச் சேர்ந்த ஷாஹின்ஷா (34), காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த பிரபு (32), செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சையது ஜியா உல்லா (28), செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூரைச் சேர்ந்த ராஜி (52) ஆகிய நான்கு பேரைப் பிடித்து விசாரித்தோம்.

சையது ஜியா உல்லா
சையது ஜியா உல்லா

அவர்களிடமிருந்து 2,36,500 ரூபாய் மதிப்புள்ள 200 ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தோம். விசாரணையில் ராஜி என்பவர் ரகுபதி என்பவருடன் சேர்ந்து ஜெராக்ஸ், ஸ்கேனிங் இயந்திரங்கள் மூலம் கள்ள நோட்டுகளைத் தயாரித்து சப்ளை செய்தது தெரியவந்தது. இதில் ரகுபதி கடந்த 19.3.2022-ம் தேதி புதுச்சேரி ஒரியன்பேட்டை காவல் நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து ஜெராக்ஸ், ஸ்கேனிங் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.