Published:Updated:

சென்னை:அடகு வைக்கப்பட்ட பிஎம்டபுள்யூ கார்; அவசரத்துக்கு வாங்கிய ஆடி கார்! ஏமாந்த தொழிலதிபர்

சொகுசு கார்
சொகுசு கார்

சென்னையில் நண்பனிடம் பிஎம்டபுள்யூ காரை தொழிலதிபர் அடகு வைத்துள்ளார். பின்னர், அந்தக் காருக்குப்பதில் ஆடி காரை வாங்கியுள்ளார். அந்த இரண்டு கார்களும் ஏமாற்றி விற்கப்பட்டுள்ளன.

சென்னை புரசைவாக்கம் சாலையம்மா நகரைச் சேர்ந்த கிவிராஜ், கடந்த 20-ம் தேதி கானத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``எனக்குக் கடந்த 2017-ம் ஆண்டு தணிகா என்பவர் அறிமுகமாகினார். தணிகாவை சந்தித்தபோது, அவர் தன்னை வழக்கறிஞர் என்று கூறினார். அப்போது முதல் நானும் தணிகாவும் நல்ல நண்பர்களாகினோம். பின்பு அவர் ஃபைனான்ஸ் தொழில் செய்வதாகக் என்னிடம் கூறினார். இந்தச் சமயத்தில் கடந்த ஜனவரி 2018-ம் அன்று எனது சித்தப்பா ரோஷன் என்பவரிடம் இருந்து பிஎம்டபுள்யூ (2013-ம் ஆண்டு மாடல்) காரை நான் வாங்கினேன். அந்தக்காரை தணிகாவிடம் கொடுத்து 2,00,000 ரூபாய் வாங்கினேன். பின்பு பணத்தை திரும்பக் கொடுத்து, எனது காரைத் திரும்ப வாங்கி கொண்டேன்.

எப்.ஐ.ஆர்
எப்.ஐ.ஆர்

அப்போது, அந்தக் காரின் ஆர்.சி புக் தொலைந்து விட்டதாக தணிகா கூறினார். அதை தேடிதருவதாகவும் தெரிவித்தார். சில நாள்களாக என்னை அலைக்கழித்தார். பிறகு என்னுடைய காரை விற்றுத் தருவதாகவும் கூறி பிஎம்டபுள்யூ காரை வாங்கினார். ஆனால், அதற்குரிய பணத்தை எனக்குத் தரவில்லை. பிறகு பணத்தை கேட்டபோது, எனக்கு ஆடி காரைக் கொடுக்கிறேன் அதற்கு மேலும் 15,00,000 ரூபாய் தர வேண்டும் என்று கூறினார்.

நானும் பணத்தைக் கொடுத்தேன். பிறகு ஆடி காரின் ஆர்சி புக் இல்லாத காரணத்தால், அதையும் திரும்பக் கொடுத்துவிட்டேன். அதன்பின், தணிகாவிடம் என்னுடைய பிஎம்டள்யூ காரையும் நான் கொடுத்த 15,00,000 ரூபாயையும் திரும்பக் கேட்டேன். அதற்கு தணிகா என்னிடம் கால அவகாசம் கேட்டார். பிறகு திடீரென்று நவம்பர் 2018- அன்று என்னுடைய வீட்டுக்கு வந்து அவருக்கு உடனடியாக கார் வேண்டும் என்று கூறினார். நானும் எனது ஆடி காரைக் கொடுத்தேன். ஆடி கார், பிஎம்டபுள்யூ கார் மற்றும் பணத்தை ஒரு வாரத்தில் கொடுத்து விடுகிறேன் எனக் கூறினார். ஆனால், இதுநாள் வரை என்னுடைய பிஎம்டபுள்யூ கார் , 15,00,000 ரூபாய் மற்றும் ஆடி கார் ஆகியவற்றை என்னிடம் திரும்ப கொடுக்கவில்லை.

சொகுசு விடுதி; நவீன ஸ்பா; துணை நடிகைகள்! -போலீஸுக்கு அதிர்ச்சிகொடுத்த புதுச்சேரி சந்துருஜி
மோசடி
மோசடி
Representational Image

அதன்பிறகுதான் எனக்கு தெரிந்தது தணிகா, என்னை மீண்டும் மீண்டும் ஏமாற்றியது. எனக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தி பணவிரயம் செய்துள்ளார். அதுசம்பந்தமாக 20.7.2020 அன்று அவருடைய வீட்டிற்கு சென்று என்னுடைய பணத்தையும் காரையும் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டேன். அதற்கு தணிகா என்னை வீட்டின் அருகே உள்ள ஜங்ஷனில் காத்திருக்கும்படி கூறினார். நானும் காத்திருந்தேன். அப்போது அங்கு வந்த தணிகா மிரட்டும் தொனியில், `வீட்டுக்கெல்லாம் வரக்கூடாது’ என்று கூறினார் . உடனே, நான் காரையும் பணத்தையும் கொடுத்துவிடுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் இதற்குமேல் கார், பணம் என்று கேட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். எனவே தணிகா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் "என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி 406, 420, 506 (1) ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தணிகாவிடம் விசாரணை நடத்தினார். இந்தத் தகவல் அடையாறு துணை கமிஷனர் விக்ரமனின் கவனத்துக்கு சென்றது. உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி துணை கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸார், தணிகாவிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சொகுசு கார்
சொகுசு கார்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பிஎம்டபுள்யூ காரை சென்னையைச் சேர்ந்த சுரேந்தர் போத்ரா என்பவர் மூலம் கோயம்புத்தூரைச் சேர்ந்த சதீஷ்குமாரிடம் 15,00,000 லட்சம் ரூபாய்க்கு தணிகா விற்பனை செய்துள்ளார். அதன்பிறகு கிவிராஜின் ஆடி காரை ஓசூரைச் சேர்ந்த ரவி என்பவருக்கு தணிகா விற்றுள்ளார். இதையடுத்து 2 சொகுசு கார்களை பறிமுதல் செய்து தணிகாவை கைது செய்துள்ளோம்" என்றனர்.

கொரோனா காலக்கட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட கானத்தூர் போலீஸாரை அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் தன்னுடைய ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு