Published:Updated:

சென்னை: மாயமான 17 வயது சிறுமி! - போக்சோ சட்டத்தில் கைதான தலைமைக் காவலரின் மகன்

கைது
கைது

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியை திருப்பதிக்கு அழைத்துச் சென்ற தலைமைக் காவலரின் மகனை போலீஸார் கைதுசெய்தனர்.

வடசென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனியார் கல்லூரியில் படித்துவருகிறார். இவரைக் காணவில்லை என்று சிறுமியின் அப்பா, தி.ரு.விக நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். சிறுமி பயன்படுத்திய செல்போன் நம்பரை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் சிறுமி போனில் பேசிய தகவல் தெரியவந்தது.

செல்போன்
செல்போன்
Representational Image

யார் அந்த இளைஞர் என போலீஸார் விசாரித்தபோது அவரின் தந்தை எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருக்கும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து தலைமைக் காவலரிடம் போலீஸார் விசாரித்தபோது அவரின் மகன் புஜ்ஜி பாபு என்கிற குமரவேலும் வீட்டில் இல்லை. அதனால் குமரவேலின் செல்போன் நம்பரின் சிக்னலை போலீஸார் ஆய்வு செய்தனர். செல்போன் சிக்னல் திருப்பதியைக் காட்டியது. உடனடியாக போலீஸார் திருப்பதிக்குச் சென்றனர். அங்கு சிறுமியிம் குமரவேலும் இருப்பதைக் கண்டறிந்த போலீஸார் இருவரையும் சென்னை அழைத்து வந்தனர்.

அப்போது சிறுமியிடமும் குமரவேலுவிடமும் விசாரித்தபோது இருவரும் பழகிய தகவல் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திரு.வி.க நகர் போலீஸார் ஒப்படைத்தனர். மகளிர் போலீஸார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி திருப்பதிக்கு குமரவேல் அழைத்துச் சென்ற விவரத்தைக் கூறினார்.

கர்ப்பமான 17 வயதுச் சிறுமிக்கு திருமணம்? - போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதான டிரைவர்
கைது
கைது

இதையடுத்து 17 வயது சிறுமியை திருப்பதிக்கு அழைத்துச் சென்ற குற்றத்துக்காக குமரவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தலைமைக் காவலரின் மகன் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு