Published:Updated:

லட்சங்களில் கமிஷன்... பள்ளி, தனியார் மண்டபம் வாங்கிய ஐ.எஃப்.எஸ் வசூல் ஏஜென்ட்டுகள் கைது!

ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம்

இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் சர்வீஸ் நிறுவன மோசடி வழக்கில் இரண்டு ஏஜென்ட்டுகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

லட்சங்களில் கமிஷன்... பள்ளி, தனியார் மண்டபம் வாங்கிய ஐ.எஃப்.எஸ் வசூல் ஏஜென்ட்டுகள் கைது!

இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் சர்வீஸ் நிறுவன மோசடி வழக்கில் இரண்டு ஏஜென்ட்டுகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம்

வேலூரைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவந்த எல்.என்.எஸ், ஐ.எஃப்.எஸ் என்ற நிதி நிறுவனத்தின் மோசடி குறித்து ஜூனியர் விகடன், விகடன் டாட் காமில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின்மீது வழக்கு பதிவுசெய்தனர். அதன்பிறகு நிதி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனம், ஒரு லட்சம் மக்களிடமிருந்து 8,000 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை வசூல்செய்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

சரவணகுமார்
சரவணகுமார்

அது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த பொருளாதார குற்றப்பிரிவின் எஸ்.பி ஜெயசந்திரன், நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடந்துவருவதாகவும் சம்பந்தப்பட்ட நிர்வாக இயக்குநர்கள் குறித்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் பண மோசடி தொடர்பாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏஜென்ட் சரவணகுமார் என்பவரை போலீஸார் சில தினங்களுக்கு முன்பு கைதுசெய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய வேலூரைச் சேர்ந்த ஏஜென்ட் ஜெகநாதன், அரக்கோணத்தைச் சேர்ந்த ஏஜென்ட் குப்புராஜ் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். அவர்கள் இருவரையும் போலீஸார் தற்போது கைதுசெய்திருக்கின்றனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்டிருக்கும் ஏஜென்ட் ஜெகநாதன் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் நிறுவனத்தை நடத்திவந்த லட்சுமி நாராயணன் என்பவரிடம் உதவியாளராகவும் இருந்து வந்திருக்கிறார். மேலும் ஜெகநாதன் ஏராளமானவர்களிடமிருந்து ஆசைவார்த்தைகளைக் கூறி பணத்தைப் பெற்று அதற்கான கமிஷனையும் வாங்கியது தெரியவந்திருக்கிறது. சமீபத்தில் அவர் தனியார் பள்ளி ஒன்றையும், கல்யாண மண்டபத்தையும் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அரக்கோணத்தைச் சேர்ந்த ஏஜென்ட் குப்புராஜூம் கோடிக்கணக்கான ரூபாயை பொதுமக்களிடமிருந்து பெற்று அதை நிதி நிறுவனத்தில் முதலீடுசெய்த விவரமும் கிடைத்திருக்கிறது.

டாக்குமென்ட்
டாக்குமென்ட்

இந்த வழக்கில் ஏற்கெனவே 27 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. தற்போது மேலும் 21 சொத்து ஆவணங்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஏஜென்ட்கள் குறித்த தகவல்களும், அவர்கள் தொடர்புடைய சொத்துகளும் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்குகளையும் ஆய்வுசெய்து வருகிறோம்."