Published:Updated:

போதைக்கு வலி நிவாரணி; மாணவிகளுக்குக் கருக்கலைப்பு மாத்திரைகள் - மூளையாகச் செயல்பட்ட இளம்பெண் கைது

பட்டதாரி ராஜலட்சுமி

22 வயதாகும் பட்டதாரிப்பெண் ராஜலட்சுமி, கருக்கலைப்பு மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் விற்று லட்சக்கணக்கில் பணத்தைச் சம்பாதித்துள்ளார்.

போதைக்கு வலி நிவாரணி; மாணவிகளுக்குக் கருக்கலைப்பு மாத்திரைகள் - மூளையாகச் செயல்பட்ட இளம்பெண் கைது

22 வயதாகும் பட்டதாரிப்பெண் ராஜலட்சுமி, கருக்கலைப்பு மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் விற்று லட்சக்கணக்கில் பணத்தைச் சம்பாதித்துள்ளார்.

Published:Updated:
பட்டதாரி ராஜலட்சுமி

சென்னையில் போதைப்பொருள்கள் விற்பனையைத் தடுக்க போதைத் தடுப்புக்கான நடவடிக்கை (Drive Against Drugs) மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் கடந்த 17.3.2022-ம் தேதி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த நபர்மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.

கிஷோர்குமார்
கிஷோர்குமார்

இதையடுத்து அவர் வைத்திருந்த பையை போலீஸார் சோதனை செய்தபோது அதில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன. அது தொடர்பாக அவரிடம் விசாரித்தபோது, அவர் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் கிஷோர் (23), சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. அவர் அளித்த தகவலின்படி சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கிஷோர்குமார் (20) என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். பின்னர் இருவரையும் போலீஸார் கைதுசெய்து வலிநிவாரணி மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவர்கள் இருவருக்கும் சென்னை கொத்தவால்சவாடியைச் சேர்ந்த பூங்குன்றன் (26), விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துபாண்டி (23), ஆண்டிபட்டியைச் சேர்ந்த கோகுலன் (24), பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்கிற மித்ரா (22) ஆகியோர் உடல்வலி நிவாணி மாத்திரைகளை சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைதுசெய்து அவர்களிடமிருந்து 7,125 வலி நிவாரணி மாத்திரைகள், இரண்டு லேப்டாப், ஒரு ஐபேட், ஒன்பது செல்போன்கள், 4,41,300 ரூபாய், மூன்று பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கைதுசெய்யப்பட்டவர்கள் டெல்லியிலிருந்து கூரியர் மூலம் வலிநிவாரணி மாத்திரைகளைச் சட்ட விரோதமாக மொத்தமாக வாங்கி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்டவர்களை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்
பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட ராஜலட்சுமி, பப்ஜி விளையாடிவந்திருக்கிறார். அப்போது பூங்குன்றன் அறிமுகமாகியிருக்கிறார். அவரிடம் கல்லூரி மாணவிகளுக்குக் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்கலாம் என ராஜலட்சுமி திட்டமிட்டிருக்கிறார். உடனே பூங்குன்றன், கருக்கலைப்பு மாத்திரைகளோடு வலி நிவாரணி மாத்திரைகளையும் விற்கலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் டெல்லியிலிருந்து வலி நிவாரணி மாத்திரைகள், கருக்கலைப்பு மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கியிருக்கின்றனர். பின்னர் அதைத் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் விற்றுவந்துள்ளனர். இந்த மாத்திரைகளை சிலர் போதைக்காகப் பயன்படுத்திவந்துள்ளனர். வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் விற்பது சட்டப்படி குற்றம். ஆனால் டெல்லியிலுள்ள கும்பலிடமிருந்து ராஜலட்சுமியும் பூங்குன்றனும் மாத்திரைகளை வாங்கி அதைக் கூடுதல் விலைக்கு விற்றுவந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் மூலம் இருவரும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்திருக்கின்றனர். இதையறிந்த அவரின் உறவினரான முத்துப்பாண்டி, ராஜலட்சுமியைக் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். பின்னர் இந்தக் காதல் ஜோடி வலி நிவாரஒ மாத்திரைகள், கருக்கலைப்பு மாத்திரைகளை டெல்லியிலிருந்து வாங்கி விற்று வந்துள்ளது. டெல்லியிலிருந்து 100 மாத்திரைகளை 8,000 ரூபாய்க்கு வாங்கி, 10 மாத்திரைகளை 2,500 ரூபாய்க்கு ராஜலட்சுமி, முத்துப்பாண்டி, பூங்குன்றன் ஆகியோர் விற்றுள்ளனர். இவர்களிடம் 2,500 ரூபாய்க்கு மாத்திரைகளை வாங்கிய கோகுல், கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டோர் அதை 3,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரைக்கும் விற்றுவந்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்டவை
பறிமுதல் செய்யப்பட்டவை

அந்தப் பணத்தில் விலையுயர்ந்த பைக்குகளை வாங்கி பந்தாவாகச் சுற்றித் திரிந்துள்ளனர். மேலும் கல்லூரி மாணவ, மாணவிகளைக் குறிவைத்து இந்தக் கும்பல் வலி நிவாரணி, கருக்கலைப்பு மாத்திரைகளை விற்று ஆடம்பரமாக வாழ்ந்துள்ளது. வாட்ஸ்அப் குரூப்கள் மூலம் மாத்திரைகள் விற்கபட்டுள்ளன. பணத்தையும் ஆன்லைன் மூலம் இந்தக் கும்பல் பெற்றுள்ளது. மாத்திரைகள் வேண்டும் என்பவர்கள், ஆர்டர் கொடுத்ததும் கூரியர் மூலம் மாத்திரைகளை இந்தக் கும்பல் அனுப்பிவைத்துள்ளது. இந்தக் கும்பல், டெல்லியில் யாரிடமிருந்து மாத்திரைகளை வாங்கியது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் அவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்துவருகிறோம். கைதுசெய்யப்பட்ட ராஜலட்சுமி, பட்டதாரி. இவர்தான் இந்தக் கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளார்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism