Election bannerElection banner
Published:Updated:

சென்னை: மகனுக்கு விரைவில் திருமணம்... மருமகளுக்காக வைரக்கம்மலை திருடிய பெண்!

வைரக் கம்மல் திருட்டு
வைரக் கம்மல் திருட்டு

பீரோ உடைக்கப்படாததால் வீட்டில் உள்ளவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகமடைந்தனர்.

சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு (58). இவர் சில தினங்களுக்கு முன் குடும்பத்தினருடன் வேலூரில் உள்ள கோயிலுக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது பீரோவிலிருந்த வைர கம்மல் மற்றும் 4 சவரன் தங்க நகைகள் மாயமாகியிருந்தது.

சென்னை: திருட்டு புல்லட் இன்ஜினில் குட்டி கார்... சினிமா ஷூட்டிங்! - இன்ஜினீயர் சிக்கியது எப்படி?
தங்க நகை
தங்க நகை

இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்தில் வெங்கடேஷ்வரலு, புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தார். அப்போது, பீரோ உடைக்கப்படாததால் வீட்டில் உள்ளவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகமடைந்தனர்.

இந்த சமயத்தில் வெங்கடஷ்வரலு வீட்டில் வேலைப்பார்த்த அம்பிகா என்பவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கள்ளசாவி மூலம் பீரோவைத் திறந்து வைர கம்மல் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அம்பிகாவை போலீஸார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

கைது
கைது
Representational Image

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ``சில மாதங்களுக்கு முன் வெங்கடேஷ்வரலு வீட்டின் பீரோ சாவி தொலைந்து போயிருக்கிறது. அதனால் மாற்றுசாவியை ரெடி தயார் செய்திருக்கிறார். வெங்கடேஷ்வரலு பீரோவில் நகைகள் இருப்பதை அம்பிகா கவனித்திருக்கிறார். அதனால், கள்ளசாவி மூலம் பீரோவைத் திறந்த அம்பிகா வைரக் கம்மல், 4 சவரன் தங்க நகைகளை திருடியிருக்கிறார். அம்பிகாவின் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. மருமகளுக்கு திருடிய வைரக் கம்மலை அன்பளிப்பாக அம்பிகா கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு