Published:Updated:

சென்னை: `18 வயதானதும் திருமணம் செய்துகொள்கிறேன்!’ - மாணவியை ஏமாற்றிய காதலன் போக்சோவில் கைது

காதல்
காதல் ( representational image )

பூஜாவுக்கு 18 வயதான பிறகும் அவரை நந்தா திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் அவரைக் கைதுசெய்திருக்கிறோம்.

திருவல்லிக்கேணி காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்துவருபவர் பூஜா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பூஜாவுக்கும் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த நந்தாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது, நாளடைவில் காதலாக மாறியது. இந்தக் காதல் ஜோடி நெருங்கிப் பழகியிருக்கிறது.

காதல்
காதல்

தற்போது காதல் ஜோடிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி பூஜா, நந்தாவிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து பூஜா, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நந்தா மீது புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், நந்தாவிடம் விசாரணை நடத்தி கைதுசெய்தனர். நந்தாவிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

நல்ல காதல், நாடகக் காதல், கள்ளக்காதல், காமக்காதல்.... உண்மையில் எது காதல்?! மேடம் ஷகிலா - 4

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``பூஜாவுக்கு 17 வயதிருக்கும்போது நந்தாவைச் சந்தித்திருக்கிறார். அப்போதிலிருந்து இருவரும் காதலித்துவந்திருக்கின்றனர். காதலிக்கும்போது மகாபலிபுரத்துக்கு பூஜாவை நந்தா அழைத்துச் சென்றிருக்கிறார். 18 வயதானதும் பூஜாவைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய நந்தா, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

கைது
கைது
representational image

தற்போது பூஜா, கல்லூரி ஒன்றில் படித்துவருகிறார். பூஜாவுக்கு 18 வயதான பிறகும் அவரை நந்தா திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் அவரைக் கைதுசெய்திருக்கிறோம். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு