Published:Updated:

சென்னை: ஒரே நேரத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - புகாரால் சிக்கிய ரவுடி முரளி

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முரளி
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முரளி

சென்னை திருநின்றவூரில் கணவரைப் பிரிந்த பெண்ணுடன் வாழ்க்கை நடத்தி வந்த பிரபல ரவுடி முரளி, அந்தப் பெண்ணின் 2 மகள்களுக்கும் ஒரே நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார்.

சென்னை திருநின்றவூரில் குடியிருந்து வருபவர் முரளி (36). இவர் கணவரைப் பிரிந்து வாழும் பெண்ணுடன் குடும்பம் நடத்திவருகிறார். இந்தநிலையில் அந்தப் பெண், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முரளி மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். நான் கேட்டரிங் வேலை செய்து வருகிறேன்.

ஆவடி மகளிர் காவல் நிலையம்
ஆவடி மகளிர் காவல் நிலையம்

குழந்தைகளை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு தனியாக வசித்த எனக்கும் முரளிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவிபோல வாழ்ந்து வருகிறோம். இந்தச் சமயத்தில் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்த என் மகள்கள், திருநின்றவூருக்கு வந்தனர். அதன்பிறகு அனைவரும் ஒரே வீட்டில் குடியிருந்தோம். இந்தச் சூழலில் நான் வேலைக்குச் சென்ற பிறகு, என் மகள்களுடன் முரளி நெருங்கிப் பழகியுள்ளார். 16, 13 வயதுடைய அந்தச் சிறுமிகளுக்கு முரளி, பாலியல் தொல்லை தொடர்ச்சியாக கொடுத்து வந்துள்ளார். எனவே, முரளி மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக சிறுமிகளிடமும் முரளியிடமும் விசாரித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்த போலீஸார், பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் முதலில் விசாரித்தனர். அப்போது சிறுமிகளின் அம்மா வேலைக்குச் சென்றதும் முரளி, ப்ரைடு ரைஸ், ஸ்வீட்ஸ் என அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

பின்னர் சிறுமிகளிடம் ஆசைவார்த்தைக் கூறி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து முரளியிடம் விசாரித்தபோது அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து முரளி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளளனர்.

சென்னை: மூதாட்டிக்கு அதிகாலையில் பாலியல் வன்கொடுமை! மர்ம நபரைத் தேடும் போலீஸ்

இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில் கைதான முரளி மீது ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கும், திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் கூட்டு பாலியல் வன்கொடுகை வழக்கும், திருநின்றவூர் காவல்நிலையத்தில் அடிதடி வழக்கு ஆகியவை நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. திருநின்றவூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் முரளியின் பெயர் உள்ளது.

திருநின்றவூர்
திருநின்றவூர்
சென்னை: மூதாட்டிக்கு அதிகாலையில் பாலியல் வன்கொடுமை! மர்ம நபரைத் தேடும் போலீஸ்

போலீஸ் விசாரணைக்கு பயந்து வீட்டை அடிக்கடி முரளி மாற்றிவந்தார். தற்போது திருநின்றவூர் கம்பர் தெருவில் வசித்துவரும் முரளி, கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். முரளியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அடைக்கவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றனர்.

முரளியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஆவடி மகளிர் போலீஸார் கவுன்சலிங் அளித்துள்ளனர். அதோடு சிறுமியின் அம்மாவுக்கும் போலீஸார் புத்திமதி கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் திருநின்றவூர் பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு