Published:Updated:

சென்னை: திருமணத்துக்குச் சென்ற குடும்பத்தினர் - தனிமையிலிருந்த ப்ளஸ் டூ மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

வீட்டில் தனியாக இருந்த ப்ளஸ் டூ மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி அவரைப் பாலியல் வன்கொடுமை செய்த பெயின்ட்டரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை தி.நகர் காவல் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியருக்கு 17 வயதில் மகள் இருக்கிறார். அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. அதனால் மகளை அழைத்துக்கொண்டு எழும்பூரிலுள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு அவரின் தாய் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்தபோது அவர் கருத்தரித்திருந்ததும், பிறகு அந்தக் கரு கலைந்ததும் தெரியவந்ததது. அதனால்தான் சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாக டாக்டர்கள் சிறுமியின் தாயிடம் கூறினர். அதைக் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

இதையடுத்து சிறுமியைத் தனியாக அழைத்து குடும்பத்தினர் விசாரித்தனர். அப்போது அவர் ``கடந்த பிப்ரவரி மாதம் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெற்றோர் சென்றபோது நான் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது எதிர்வீட்டில் வசித்துவரும் பெயிண்டர் வேலை பார்க்கும் அரவிந்தன் (24) வீட்டுக்கு வந்தார். அவர் என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்தார்.

சென்னை: வீடியோ; மது; கூட்டு பாலியல் வன்கொடுமை! - ஒன்றரை ஆண்டுகளாக சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

அதனால் நான் கருவுற்றேன். நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது என அரவிந்தன் என்னை மிரட்டினார். அதற்கு பயந்து நான் வெளியில் சொல்லவில்லை" என்று கண்ணீர்மல்கக் கூறினார். இதையடுத்து சிறுமியின் அம்மா, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பெயின்ட்டர் அரவிந்தனிடம் விசாரணை நடத்தினர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சிறுமி ப்ளஸ் டூ படித்துவருகிறார். மருத்துவமனை பரிசோதனையில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை தெரியவந்தது. சிறுமியின் அம்மா அளித்த புகாரின் அடிப்படையில் அரவிந்தனிடம் விசாரித்தோம். அப்போது அவர் அளித்த தகவலின்படி அரவிந்தன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சலிங் அளித்திருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு