Published:Updated:

`சாமி கும்பிடுபவர்களிடம் திருடுவது எளிது!' - சென்னை போலீஸாரை அதிரவைத்த பெண்

கூட்டநெரிசலைப் பயன்படுத்தி செல்போன்கள், தங்கச் செயின், பொருள் ஆகியவற்றைத் திருடும் பானு என்பவர், திருவான்மியூர் போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.

பானு
பானு

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், திருவான்மியூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கர்ப்பிணி போல காட்சியளித்த இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகள் போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பானுவிடமிருந்து மீட்கப்பட்ட செல்போன்கள்
பானுவிடமிருந்து மீட்கப்பட்ட செல்போன்கள்

இதையடுத்து அந்தப் பெண்ணை மப்டியில் பெண் போலீஸார் கண்காணித்தனர். அப்போது அந்தப் பெண், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, செல்போன், தங்கச் செயின், பணம் ஆகியவற்றை திருடுவதை போலீஸார் பார்த்தனர். உடனடியாக அந்தப் பெண்ணைப் பிடித்து விசாரித்தபோது, அவர், `சாமி கும்பிட கோயிலுக்கு வந்துள்ளேன்' என்று கூறியபடி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். உடனே அவரை பெண் போலீஸார் பிடிக்க இடுப்புப் பகுதியில் கையை வைத்தனர்.

அப்போது இடுப்பிலிருந்த பேக்கிலிருந்து செல்போன்கள் ஒவ்வொன்றாக விழத் தொடங்கியது. அதைப்பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். செல்போன்கள் விழுந்ததும் அந்தப் பெண் அங்கிருந்து மீண்டும் ஓட முயன்றார். அதற்குள் போலீஸார் சுதாரித்துக்கொண்டு அவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரித்தபோது, தன்னுடைய பெயர் பானு சார்மு (38), காஞ்சிபுரம் தாலுகா, கல்பாக்கம் எனத் தெரிந்தது.

`காலையில் கல்லூரி; மாலையில் திருட்டு!' - ரயில்வே போலீஸாரிடம் சிக்கிய சென்னை மாணவி

இதையடுத்து பானுவிடமிருந்து 5 செல்போன்கள், தங்கச் செயின்கள், வாட்ச் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மருந்தீஸ்வரர் கோயிலில் நகை, செல்போன் ஆகியவற்றை திருடியது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, பானு மீது வழக்குபதிவு செய்தார். பின்னர் பானுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர். பானு குறித்து போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,``சென்னை கந்தன்சாவடியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருக்கும் உமாமகேஸ்வரி என்பவர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், நான் மகளிர்விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறேன். கடந்த 10-ம் தேதி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தேன். முருகன் சந்நிதியில் சாமி கும்பிட்டபோது யாரோ என்னை இடித்துவிட்டுச் சென்றனர். பின்னர், எனது ஹேண்ட் பேக்கைப் பார்த்தபோது அது திறந்துகிடந்தது. அதனுள் இருந்த செல்போனைக் காணவில்லை.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் கர்ப்பிணி போல காட்சியளித்த இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகள் போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

உடனே செல்போன் நம்பருக்கு போன் செய்தேன். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே, திருட்டு போன செல்போனை கண்டுபிடித்துத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பானுவிடமிருந்து உமா மகேஸ்வரியின் செல்போனையும் பறிமுதல் செய்துள்ளோம். மற்ற செல்போன்களின் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடந்துவருகிறது. விரைவில் பானு திருடிய செல்போன்கள், நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்றனர்.

பானுவிடம் போலீஸார் விசாரித்தபோது, அவர் செல்போன் திருடுவது குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். ``செல்போன்களைத் திருட ஒரு டெக்னிக் உள்ளது. அதுவும் கோயிலில் செல்போன்களைத் ஈஸியாகத் திருடலாம். கார்த்திகை தீபம் என்பதால் மருந்தீஸ்வரர் கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று வீட்டிலிருந்து டிப்டாப்பாகப் புறப்பட்டுக் கோயிலுக்கு வந்தேன்.

மருந்தீஸ்வரர் கோயிலில் செல்போன்களைத் திருடிய பானு, அதைத் தன்னுடைய இடுப்புப் பகுதியில் வைத்திருந்த பேக்கில் போட்டு வைத்திருந்தார். அவரை பெண் போலீஸார் பிடித்தபோது இடுப்பிலிருந்த பேக்கிலிருந்து செல்போன்கள் ஒவ்வொன்றாக விழுந்தன
போலீஸ்

அப்போது கோயிலில் ஒவ்வொருவரும் மெய்மறந்து சாமியை கும்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எளிதாக செல்போன், நகை, பணம் ஆகியவற்றை திருடினேன். மருந்தீஸ்வரர் கோயிலில் முருகன் சந்நிதியில் சாமி கும்பிட்ட இளம்பெண் ஒருவர் கண்களை மூடி சாமி கும்பிட்டார். அப்போது அவரின் அருகே நானும் சாமி கும்பிடுவது போல நின்றேன். பின்னர் அந்தப் பெண்ணின் ஹேண்ட் பேக்கிலிருந்து ஜிப்பைத் திறந்து செல்போனை எடுத்துவிட்டுச் சென்றேன். அப்போதுகூட அந்தப் பெண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. அதனால்தான் அவரை இடித்துவிட்டு அங்கிருந்து சென்றேன்" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.``பானு மீது சென்னையில் உள்ள சில காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருட்டு வழக்கில் சிறைக்குச் செல்லும் பானு, ஜாமீனில் வெளிவந்தபிறகு மீண்டும் திருடுவதை வழக்கமாக வைத்துள்ளார். மருந்தீஸ்வரர் கோயிலில் செல்போன்களைத் திருடிய அவர், தன்னுடைய இடுப்புப் பகுதியில் பேக் ஒன்றை வைத்துள்ளார். அதில்தான் திருடிய செல்போன்கள், நகைகள், பொருள்களை வைத்திருந்தார்.

பானு
பானு

பேருந்துகளில் பயணி போல ஏறும் பானு, ஆண்களின் அருகே நிற்பார். அப்போது ஆண்களிடம் நெருக்கமாக நின்றபடி முதலில் பேச்சுக் கொடுப்பார். பிறகு அவர்களின் கவனத்தை திசை திருப்பி செல்போன், பொருள்களை திருடி விட்டு பேருந்தை விட்டு இறங்கிவிடுவார். பானுவிடம் திருட்டு செல்போன்களைக் குறைந்த விலைக்கு வாங்க ஒரு டீம் உள்ளது" என்றார்.