Published:Updated:

சென்னை: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! - தனியாக வசித்து வந்த காவலாளி கைது

சிறார் வதை
சிறார் வதை

சென்னையில் ஒரே பகுதியில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் காவலாளி ரகுபதியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை தி.நகர் காவல் மாவட்டத்தில் ஒரே பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுமிகளின் அம்மாக்கள், மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் சென்னையைச்சேர்ந்த ரகுபதி (52) என்பவர், தங்களின் மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து போலீஸார் ரகுபதியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

விசாரணையில் சிறுமிகளுக்கு ரகுபதி பாலியல் தொல்லைக் கொடுத்தது தெரியவந்தது. அதைப்போல பாதிக்கப்பட்ட சிறுமிகளிடமும் போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிகள் அளித்த தகவலின்படி ரகுபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ரகுபதியை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட ரகுபதி, தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனியாக வசித்து வருகிறார். அதனால் அந்தப்பகுதியில் உள்ள சிறுமிகளிடம் அன்பாக பேசுவார். அப்போது யாருமில்லாத நேரத்தில் அவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். அதை வெளியில் சொல்லக்கூடாது என சிறுமிகளை ரகுபதி மிரட்டி வந்திருக்கிறார்.

ஆவடி: திருமண ஆசைகாட்டி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர்! -போக்சோ சட்டத்தில் கைதுசெய்த மகளிர் போலீஸ்
கைது
கைது

பாதிக்கப்பட்ட சிறுமிகள், ரகுபதி குறித்து பெற்றோரிடம் கூறியபோதுதான் ரகுபதி குறித்த தகவல் வெளியில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு கவுன்சலிங் அளித்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

ஒரே பகுதியில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த புகாரில் காவலாளி ரகுபதி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை! - குண்டர் சட்டத்தில் தொழிலாளி சிறையிலடைப்பு
அடுத்த கட்டுரைக்கு