Published:Updated:

`மக்களை ஏமாற்றும் வீடியோ; 5 பிரிவுகளில் வழக்கு!’-யார் இந்தப் போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்?

திருத்தணிகாசலம்
திருத்தணிகாசலம்

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட திருத்தணிகாசலம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸிக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன் என்று அதிரடியாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் `ரத்னா சித்த மருத்துவமனை’ என்ற பெயரில் அவர் மருத்துவமனை நடத்தி வந்த திருத்தணிகாசலம் (50) . இவர் தினந்தோறும் வெளியிட்ட வீடியோக்களால் அதிர்ச்சியடைந்த இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் கணேஷ், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார்.

`90 வீடியோக்கள்; கொரோனாவுக்கு மருந்து!' -சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் சிக்கிய கதை
திருத்தணிகாசலம்
திருத்தணிகாசலம்

அவர் கொடுத்த புகாரில், ``சென்னை கோயம்பேட்டில் மருத்துவமனை நடத்திவரும் திருத்தணிகாசலம் என்பவர் முறையான மருத்துவத் தகுதியோ, அங்கீகாரப் பதிவோ இல்லாமல் கோவிட் -19 எனும் கொரோனா வைரஸ் சம்பந்தமாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். அதன் மூலம் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார். மேலும் தமிழக முதல்வர் படத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் விதத்தில் வீடியோ ஒன்றும் பரப்பப்பட்டுள்ளது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் நாகஜோதி மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் கொண்ட டீம், திருத்தணிகாசலத்தைத் தேடிவந்தனர். அவர், தேனி பெரியகுளம் பகுதியில் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்ததும் போலீஸார் அவரை இன்று அதிகாலை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

`பொதுமக்கள் நலனுக்கே ஆபத்து!- அரசின் நடவடிக்கையால் சிக்கலில் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்
திருத்தணிகாசலம்
திருத்தணிகாசலம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த திருத்தணிகாசலம் மீது 188 IPC r/w sec. 3 of Epidemic Diseases Act, 505(1)(b) , 153A IhPC, sec. 54 of Disaster Management Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன''என்றனர்.

சித்த மருத்துவர்கள் கூறுகையில், ``20 ஆண்டுகளுக்கு முன் அரும்பாக்கம் பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார் திருத்தணிகாசலம். அப்போது அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர் திருத்தணிகாசலம் கிளினிக்கில் வேலை பார்த்தார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர், அந்த மாணவியை திருத்தணிகாசலம் திருமணம் செய்து கொண்டார். திருத்தணிகாசலம், பிரபலமான மருத்துவராக வலம் வந்த நிலையில்தான் இந்தச் சிக்கலில் சிக்கிக் கொண்டார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு