Published:Updated:

சென்னை: 100 ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள்! - மாணவியால் சிக்கிய மின்வாரியப் பொறியாளர்

ஆபாச வீடியோ வழக்கில் கைதான  அருண் கிறிஸ்டோபர்
ஆபாச வீடியோ வழக்கில் கைதான அருண் கிறிஸ்டோபர்

சென்னையில் கல்லூரி மாணவியைக் காதலிப்பதாகக் கூறி, அவரின் அந்தரங்க வீடியோ, புகைப்படங்களைப் பெற்ற மின்வாரியப் பொறியாளரை அடையாறு சைபர் க்ரைம் போலீஸார் பொறிவைத்துப் பிடித்துள்ளனர். அவரிடமிருந்த ஏராளமான பெண்களின் அந்தரங்க புகைப்படங்களைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் தந்தை ஒருவர், சில தினங்களுக்கு முன்பு அடையாறு துணை கமிஷனர் விக்ரமனைச் சந்தித்தார். அப்போது அவர், தன்னுடைய மகளின் இன்ஸ்டாகிராமில் தொடர்புகொண்ட நபர், உடன் பயிலும் கல்லூரி மாணவிகளின் செல்போன் நம்பர்களைக் கேட்பதாகவும், மறுத்தால் தன் மகளின் அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவதாகவும் தொடர்ந்து மிரட்டுவதாகக் கண்ணீர்மல்கக் கூறினார். அதைக் கேட்ட துணை கமிஷனர், அடையாறு சைபர் க்ரைம் போலீஸாரிடம் இந்தப் புகார் குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image
சென்னை: வாட்ஸ்அப் குரூப்; பகிரப்பட்ட ஆபாச வீடியோக்கள்! - போலீஸில் சிக்கிய நண்பர்கள்

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயபாலாஜி, மகாராஜன், முதல்நிலைக் காவலர்கள் சதீஸ், இந்திராணி ஆகியோர்கொண்ட தனிப்படை போலீஸார் மாணவியை மிரட்டும் நபர் குறித்து விசாரித்தனர். பாதிக்கப்பட்ட மாணவியிடம் பேசிய பெண் காவலர்கள், மிரட்டும் நபர் குறித்த விவரங்களைச் சேகரித்தனர். அதன் அடிப்படையில் மாணவியை மிரட்டுவது தண்டையார்பேட்டை, முத்தமிழ்நகரைச் சேர்ந்த அருண் கிறிஸ்டோபர் (25) எனத் தெரியவந்தது. இவர், இன்ஜினீயரிங் படித்துவிட்டு மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றுவதும் தெரிந்தது.

இதையடுத்து அருண் கிறிஸ்டோபரை அடையாறு சைபர் க்ரைம் போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து அடையாறு சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``அருண் கிறிஸ்டோபருக்கும் அந்தக் கல்லூரி மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாணவியிடம் நட்பாகப் பழகிய அருண், இரண்டு மாதங்களுக்குப் பிறகு காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். அதை மாணவியும் முழுமையாக நம்பியிருக்கிறார். பின்னர், மாணவியிடம் வீடியோ காலில் அருண் அடிக்கடி பேசிவந்திருக்கிறார்.

அப்போது ஒருநாள், அந்தரங்கப் புகைப்படங்களை அனுப்பும்படி மாணவியிடம் அருண் கூறியிருக்கிறார். மாணவியும் அந்தரங்கப் புகைப்படங்களை அருணுக்கு நம்பி அனுப்பிவைத்திருக்கிறார். அதன் பிறகு மாணவியின் இன்ஸ்டாகிராமின் பாஸ்வேர்டை அருண் பெற்றிருக்கிறார். அந்த அக்கவுன்ட்டிலிருக்கும் மாணவியின் தோழிகளுக்கு அருண் குறுந்தகவல்களை அனுப்பியிருக்கிறார். அதைப் பார்த்த மாணவியின் தோழிகள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இதையடுத்து சில தோழிகள், மாணவியின் தந்தையிடம் விவரத்தைக் கூறியிருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, தன்னுடைய மகளிடம் விவரத்தைக் கேட்டிருக்கிறார். அப்போதுதான் மாணவி அருண் குறித்த விவரத்தை தந்தையிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து அருண் கிறிஸ்டோபரைக் கைதுசெய்தோம். அவரிடம் விசாரித்தபோது மாணவியின் இன்ஸ்டாகிராம் மூலம் அவரின் தோழிகளையும் தன்னுடைய வலையில் வீழ்த்த அருண் முயன்றிருக்கிறார். அருணிடமிருந்து லேப்டாப் மற்றும் இரண்டு செல்போன்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம்.

அதை ஆய்வு செய்தபோது easy wallet என்ற cloud app-ல் பல பெண்களின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன. அவற்றை மென்பொருள் உதவியுடன் பறிமுதல் செய்திருக்கிறோம். அருண் கிறிஸ்டோபரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

``பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை அறிவுறுத்தியபோதிலும் இது போன்ற குற்றச் செயல்கள் நடந்துவருகின்றன.

துணை கமிஷனர் விக்ரமன்
துணை கமிஷனர் விக்ரமன்
சென்னை: செல்போன் சிக்னல்; கார்கள்! - 3 பேர் சுட்டுக் கொலையில் மருமகள் சிக்கியது எப்படி?

எனவே பெண்கள், குழந்தைகள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மேலும், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது அதிக கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட புகைப்படங்களை அறிமுகம் இல்லாதவர்களுடன் பகிர வேண்டாம். எனவே, பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகள் தைரியமாக 8754401111 என்ற செல்போன் நம்பரில் தயங்காமல் புகாரளிக்கலாம்" என்று துணை கமிஷனர் விக்ரமன் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு