Published:Updated:

சென்னை: `ஆட்டோவில் கடத்தப்பட்ட இளம்பெண்; புத்திசாலித்தனமாகத் தப்பித்தது எப்படி?'

கைதான ஆட்டோ டிரைவர் தினேஷ்

இளம்பெண்ணை திடீரென கத்தியைக் காட்டி மிரட்டிய தினேஷ், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படியும், காதலிக்கும்படியும் மிரட்டியுள்ளார்.

சென்னை: `ஆட்டோவில் கடத்தப்பட்ட இளம்பெண்; புத்திசாலித்தனமாகத் தப்பித்தது எப்படி?'

இளம்பெண்ணை திடீரென கத்தியைக் காட்டி மிரட்டிய தினேஷ், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படியும், காதலிக்கும்படியும் மிரட்டியுள்ளார்.

Published:Updated:
கைதான ஆட்டோ டிரைவர் தினேஷ்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடியிருப்பவர் கவிதா (43) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் 18 வயது மகள், கடந்த 7.7.2021-ம் தேதி புளியந்தோப்பு அங்காளம்மன் கோயில் தெரு அஷ்டபுஜம் ரோடு சந்திப்பில் நடந்து வந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த தினேஷ் என்பவர் கவிதாவின் மகளிடம் பேசியிருக்கிறார். பின்னர் அவளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார். இதையடுத்து இளம்பெண்ணை திடீரென கத்தியைக் காட்டி மிரட்டிய தினேஷ், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படியும், காதலிக்கும்படியும் மிரட்டியிருக்கிறார். அதனால் பயந்துபோன இளம்பெண், தன்னுடைய அம்மா கவிதாவுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

கடத்தல்
கடத்தல்
Representation Image

இதையடுத்து கவிதா புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் தினேஷின் செல்போன் சிக்னல் மூலம் அவரைத் தேடிவந்தனர்.இந்தநிலையில், பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறி இளம்பெண் ஆட்டோவிலிருந்து கீழே இறங்கி தப்பிச் சென்றார். இதையடுத்து போலீஸார் தினேஷைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவருக்கு உதவிய புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் இம்ரானையும் போலீஸார் கைதுசெய்தனர். இவர்களிடமிருந்து கத்தி, செல்போன், கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``புளியந்தோப்பைச் சேர்ந்த தினேஷ், அவரின் நண்பர் இம்ரான் இருவரும் ஆட்டோ ஓட்டிவருகின்றனர். சம்பவத்தன்று கவிதாவின் மகள், வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல நடந்து வந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த தினேஷ், கவிதாவின் மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியிருக்கிறார். அதை நம்பி கவிதாவின் மகளும் ஏறியிருக்கிறார். தினேஷ், கவிதாவின் தோழி ஒருத்தியை காதலித்துவந்திருக்கிறார். ஆட்டோவை வேறு வழியில் தினேஷ் ஓட்டிச் சென்றதும் கவிதாவின் மகள், எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்குத் தனது நண்பன் ஒருவன் வருகிறான், அவனையும்ஏற்றிக் கொண்டு வீட்டுக்குச் செல்வோம் என்று தினேஷ் கூறியிருக்கிறார்.

இம்ரான்
இம்ரான்

இதையடுத்து இம்ரான் ஆட்டோவில் ஏறியிருக்கிறார். அதன் பிறகு ஆட்டோவை இம்ரான் ஓட்ட, பின் இருக்கையில் தினேஷ் உட்காந்திருக்கிறார். அப்போது கவிதாவின் மகளிடம் தன்னுடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டாள். அதனால்தான் தாடி வளர்க்கிறேன். உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நாம் இருவரும் திருமணம் செய்துகொள்வோம் என்று கூறியிருக்கிறார். அதற்கு இளம்பெண் சம்மதிக்காததால் கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கிறார் தினேஷ். இந்தச் சமயத்தில்தான் செல்போன் மூலம் மெசேஜை கவிதாவுக்கு இளம்பெண் அனுப்பியிருக்கிறார். பின்னர் பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறி, தினேஷிடமிருந்து தப்பி வந்திருக்கிறார். இதையடுத்து தினேஷ், இம்ரானைக் கைதுசெய்திருக்கிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism