Published:Updated:

மெரினாவில் தூங்கிக்கொண்டிருந்தவர் கொடூரக் கொலை; இருவர் கைது - என்ன நடந்தது?

கொலை வழக்கில் கைதான சமீல் அகமது

சென்னையில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டவரைக் கொலைசெய்த இருவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

மெரினாவில் தூங்கிக்கொண்டிருந்தவர் கொடூரக் கொலை; இருவர் கைது - என்ன நடந்தது?

சென்னையில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டவரைக் கொலைசெய்த இருவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
கொலை வழக்கில் கைதான சமீல் அகமது

சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் கண்ணகி சிலைக்கும், நேதாஜி சிலைக்கும் இடையே ரத்தக் காயங்களுடன் ஒருவர் கடந்த 10-ம் தேதி அதிகாலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. உடனடியாக மெரினா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். பின்னர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவரை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலை
கொலை

அவர் யார் என்று விசாரித்தபோது திருவல்லிக்கேணி, வெங்கடாச்சல நாயக்கர் தெருவைச் சேர்ந்த பச்சையப்பன் (50) எனத் தெரியவந்தது. மேலும் சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது பச்சையப்பனை இரண்டு பேர் கம்பியால் தாக்கியதும், அருகிலிருந்த கல்லில் தலையை மோதியதும் தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து கொலை செய்தவர்கள் குறித்து போலீஸார் விசாரித்தபோது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த சமீல் அகமது (32), சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சுஜி (38) ஆகியோர் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது கொலைக்கான காரணமும் தெரியவந்தது.

சுஜி
சுஜி

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட சமீல் அகமது என்பவர் கடந்த 9-ம் தேதி பச்சையப்பனின் வீட்டின் அருகில் மது அருந்தியுள்ளார். அதை பச்சையப்பன் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த சமீல்அகமது தன்னுடைய நண்பர் சுஜியை அழைத்துக்கொண்டு மெரினா கடற்கரைப் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது பச்சையப்பன், அங்கு தூங்கியதைப் பார்த்த இருவரும் அவரைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். கைதான சமீல் அகமது மீது அடிதடி வழக்கும், சுஜி மீது வழிப்பறி வழக்கும் உள்ளது. கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism