Published:Updated:

29 செ.மீ உயரம்; ரூ.25 கோடி மதிப்பு? - சென்னையில் பச்சைக்கல் லிங்கம் பறிமுதல் செய்யப்பட்டது எப்படி?

பச்சைக்கல் லிங்கம் பறிமுதல்

சென்னையில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான பச்சைக்கல் லிங்கத்தைப் பதுக்கிவைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர்.

29 செ.மீ உயரம்; ரூ.25 கோடி மதிப்பு? - சென்னையில் பச்சைக்கல் லிங்கம் பறிமுதல் செய்யப்பட்டது எப்படி?

சென்னையில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான பச்சைக்கல் லிங்கத்தைப் பதுக்கிவைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
பச்சைக்கல் லிங்கம் பறிமுதல்

தமிழகத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் சிலைகளை மீட்கும் பணியைச் சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிரமாகச் செய்துவருகிறார்கள். இந்நிலையில், சென்னைக்கு அருகிலுள்ள பூந்தமல்லி பகுதியில் பழைமையான உலோக நாகாபரணத்துடன்கூடிய பச்சைக்கல் லிங்கம் ஒன்று பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலை அடுத்து, சிலையை வைத்திருந்தவர்களிடம் போலீஸார் சிலை வாங்கும் வியாபாரிகள்போல விலை பேசியிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

சிலை வைத்திருந்தவர்களிடம் விலை பேசியதில், 25 கோடி ரூபாய் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாபாரிகள்போல நேரில் சென்று சிலையைப் பறிமுதல் செய்தனர். இந்தப் பச்சைக்கல் லிங்கத்தைப் பதுக்கிவைத்திருந்த பூந்தமல்லியைச் சேர்ந்த பக்தவத்சலம் (எ) பாலா (46), பாக்கியராஜ் (42) ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். போலீஸார் கைதானவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கைப்பற்றப்பட்ட பச்சைக்கல் லிங்கம், உலோகத்தால் ஆன நாகாபரணத்தைத் தாங்கியிருக்கிறது. மேலும், அதன் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வாருடன் சுமார் 29 செ.மீ உயரமும்... 18 செ.மீ அகலமும் உள்ளது. அதேபோல, பீடத்தின் அடிப்பாகச் சுற்றளவு சுமார் 28 சென்டிமீட்டரும், அதன் எடை சுமார் 9.800 கிலோ கிராமும் இருக்கிறது. இந்தப் பச்சைக்கல் லிங்கத்தின் உயரம் சுமார் 7 செ.மீ என்றும், அதன் சுற்றளவு 18 செ.மீ என்றும் கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட பச்சைக்கல் லிங்கம்
கைப்பற்றப்பட்ட பச்சைக்கல் லிங்கம்

கைப்பற்றப்பட்டிருக்கும் சிலை, 500 ஆண்டுகள் தொன்மையானது எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த லிங்கத்தின் கீழே சிவபெருமானின் ஐந்து முகங்கள் ஆயுதங்களுடன் பொறிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சிலையின் அமைப்பு நேபாள பாணியில் அமைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism