Election bannerElection banner
Published:Updated:

சென்னை: `பங்குச் சந்தை முதலீடு; அதிக லாபம்!’ - ஆசைகாட்டி லட்சக்கணக்கில் சுருட்டிய இளைஞர்கள்

பங்குச் சந்தை மோசடியில் கைதான செய்யது அபுதாகிர்
பங்குச் சந்தை மோசடியில் கைதான செய்யது அபுதாகிர்

பங்குச் சந்தை முதலீடு என்று கூறி பலரை ஏமாற்றியவர்களை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் வித்யா ஜெயந்த் குல்கர்னி மேற்பார்வையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் துணை கமிஷனர் நாகஜோதி, கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார், உதவி கமிஷனர் வேல்முருகன் ஆகியோர் ஆலோசனையின் பேரில் சைபர் க்ரைம் விசாரணை நடத்தினர்.

மோசடி
மோசடி
representational image

விசாரணையில் செய்யது அபுதாகிர் மற்றும் செய்யது அலி ஹூசைன் ஆகியோர் வெளிநாட்டு செல்போன் நம்பரிலிருந்து அசோக் குமாரை தொடர்புகொண்டு பேசியிருக்கின்றனர். அப்போது அவர்கள் ஒரு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு அதன் இயக்குநர்கள் என்றும், ஆன்லைன் மூலம் அந்நியச் செலவாணி பங்கு வர்த்தகத்தைச் செய்துவருவதாகவும் கூறியிருக்கின்றனர். பின்னர் தங்களின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியிருக்கின்றனர்.

பங்குச் சந்தை: வரியை மிச்சம் செய்ய வழி... எப்போது பங்கு வாங்கலாம்? #SmartinvestorIn100Days நாள் - 86

அதை நம்பிய அசோக்குமாரும் பல்வேறு தேதிகளில் தன்னுடைய கடன் அட்டைகள் மூலம் 10.54 லட்சம் ரூபாயை முதலீடாகச் செய்திருக்கிறார். பணத்தைப் பெற்றுக்கொண்ட இருவரும் லாபத்தைத் திருப்பிக் கொடுத்தவில்லை. அதோடு அசோக்குமார் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து இருவரையும் கைதுசெய்து விசாரித்தபோது கூடுதல் தகவல்கள் வெளியாகின.

செய்யது ஹூசைன்
செய்யது ஹூசைன்

இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர் (40). கடலூர் மாவட்டம், சிதம்பரம் பரங்கிப்பேட்டையச் சேர்ந்தவர் செய்யது அலி ஹூசைன் (41). இவர்கள் இருவரும் போலியான நிறுவனங்களை இணையதளங்களில் உருவாக்கியிருக்கின்றனர். பின்னர் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பவர்களிடம் வெளிநாட்டு செல்போன் நம்பர்களைப் பயன்படுத்திப் பேசியிருக்கின்றனர். அப்போது பங்குச் சந்தை என்ற பெயரில் பலரை மோசடி செய்திருக்கின்றனர். அசோக்குமாரிடமிருந்து பணத்தை வாங்கி மோசடி செய்திருக்கின்றனர். இதையடுத்து இருவரையும் கைதுசெய்து அவர்களிடமிருந்து 1,95,000 ரூபாயையும் 5 செல்போன்கள், ஒரு லேப் டாப் ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருக்கிறோம். இவர்கள் இந்தியா முழுவதும் மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்கள் தொடங்கியிருக்கும் இரண்டு மோசடி நிறுவனங்களில் நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்து ஏமாந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. எனவே பங்கு வர்த்தகத்தில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்யும்போது நிறுவனத்தின் உண்மைத்தன்மையைத் தெரிந்துகொண்டு பணம் செலுத்த வேண்டும்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு